ரவீந்திரநாத் எம்பி பதவி விவகாரம்; தீர்ப்பு வழங்கிய நீதிபதியே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உள்ளார் - ஓபிஎஸ்
தேனி எம்பி வெற்றி பெற்றது தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு வழங்கிய நீதிபதியே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உள்ளார் என்றார் ஓபிஎஸ்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேனியை சேர்ந்த மிலானி என்பவரை கண்டித்து பெரியகுளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
HBD MS DHONI: 'நீ சிங்கம் தான்..’ 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் தோனியின் கேப்டன்சி ரெக்கார்ட்ஸ்!
DIG Vijayakumar: கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை காரணம் இதுவா? - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்..!
இதற்கு பெரியகுளம் ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்த மிலானியை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்தனர். இதற்கிடையே பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே புறப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இந்த தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, தீர்ப்பு வழங்கிய நீதிபதியே மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கி உள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து கேட்டபோது நாளை அறிக்கை வர இருக்கிறது என்றார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்