மேலும் அறிய

தேனி: டிடிவி தினகரன் மேடையில் ஓபிஎஸ்..! ஸ்டாலினுடன் இபிஎஸ் கூட்டு என குற்றச்சாட்டு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76,வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்த பொது கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76,வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் அ.தி.மு.க மீட்பு குழுவினர் சார்பில் டி.டி.வி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து  பொதுக்கூட்டத்தினை நடத்தினார்கள்.


தேனி: டிடிவி தினகரன் மேடையில் ஓபிஎஸ்..! ஸ்டாலினுடன் இபிஎஸ் கூட்டு என குற்றச்சாட்டு

தேனி பங்களா மேட்டில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் இரு கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். இவ்விழா மேடையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரனும் அ.தி.முக. மீட்பு குழு தலைவர் ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றிணைந்து கைகுலுக்கி தங்களின் கூட்டணியை வெளிப்படுத்தினார்கள்.மேலும் இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி தினகரன் எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து அ.தி.மு.கவினை கைப்பற்றி மீண்டும் தமிழகத்தில் அம்மா ஆட்சியை நிலைநாட்டிட தர்மயுத்தம் தொடங்கியுள்ளதாக பேசினார்கள். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி காலத்தில் ஊழல் நடைபெற்றதாகவும், தற்பொழுது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியில் அவர்கள்   தேர்தல் வாக்குறுதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை எனவும் பல்வேறு போராட்டங்களை பொதுமக்கள் நடத்தி வருவதாக தி.மு.க ஆட்சியின் மீது குற்றங்களை கூறி அதிமுக கட்சியினை தொண்டர்கள் கையில் வழங்குவதற்கு உறுதுணையாக ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்றிட வேண்டும் எனவும்,


தேனி: டிடிவி தினகரன் மேடையில் ஓபிஎஸ்..! ஸ்டாலினுடன் இபிஎஸ் கூட்டு என குற்றச்சாட்டு

மேலும்  மீண்டும் அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவதற்காக தான் நானும் டிடிவியும் ஒன்றிணைந்துள்ளோம், எனவும் அ.தி.மு.கவினை துரோகி எடப்பாடி பழனிச்சாமி கையில் இருந்து மீட்டெடுத்து அம்மாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொடுப்பதற்காக தான் நாங்கள் இந்த தர்ம யுத்தத்தை தொடங்கி இருக்கின்றோம். அதிமுகவினை மீட்டெடுத்து தொண்டர்கள் கையில் வழங்குவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஒபிஎஸ் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தேனியில் நடந்த பொதுக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசுகையில்,

ஸ்டாலினும், பழனிச்சாமியும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளனர் எனவும், ஆறு ஆண்டுகள் கழித்து என்னுடைய பழைய நண்பர் ஓபிஎஸ் இங்கு கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,கடந்த 1999 தேனி பாராளுமன்ற தேர்தலில் எனக்கு வெற்றிக்காக பாடுபட்டவர் ஓபிஎஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் அன்போடு தான் இருந்தோம். அம்மா வழிநடத்திய இந்த இயக்கத்தை கபலிகரம் செய்தவரிடம் மீட்கவே நாங்கள் ஒன்று இணைத்துள்ளோம், அம்மா என்கிற அன்பு சக்தி எங்களை மீண்டு ஒன்று இணைத்து இருக்கிறது அம்மா வழிநடத்திய இயக்கத்தை நாங்கள் மீட்க்காமல் விடமாட்டோம்,


தேனி: டிடிவி தினகரன் மேடையில் ஓபிஎஸ்..! ஸ்டாலினுடன் இபிஎஸ் கூட்டு என குற்றச்சாட்டு

அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவன் நான் என்று உங்களுக்கு தெரியும், பதவிக்காக யார் காலிலும் வில மாட்டேன் என்பது உங்களுக்கு தெரியும், அரசியலை தாண்டி நாங்கள் இருவரும் நண்பர்கள் அம்மாவின் ஆட்சியை மீண்டும் நாங்கள்  கொண்டுவருவோம்,தேனியில் இதே பங்களாமேடு பகுதியில் தான் அம்மா என்னை முதன் முதலாக வேட்பாளராக அறிவித்தார்,அரசியலில் நான் பிறந்த மண் தேனி தான் அதனால் தான் தேனி என்றாலே தேனீ சாப்பிடுவது போன்று இருக்கும்,தேனி சட்டமன்ற தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் என்னை நிற்க வேண்டும் என்று சிலர் என்னிடம் கூறினார்கள். எப்போது தேனி தேர்தலில் நிற்க வேண்டும் என்று எனக்கு தெரியும். எம்ஜிஆர் கையில் இருந்த வெற்றி சின்னம் பிஎஸ்.வீரப்பா, நம்பியார் கையில் இருப்பது போல் எடப்பாடி பழனிச்சாமி கையில் இருந்ததால் தான் அமமுக ஆரம்பித்தோம். எந்த நேரத்தில் ஸ்டாலின் என்று பெயர் வைதார்களோ என்று தெரியவில்லை. சர்வாதிகாரி ஸ்டாலினையை மிஞ்சிவிட்டார் .


தேனி: டிடிவி தினகரன் மேடையில் ஓபிஎஸ்..! ஸ்டாலினுடன் இபிஎஸ் கூட்டு என குற்றச்சாட்டு

தேனியில் திமுக கூட்டணிக்கு மாபெரும் மரண அடி கொடுக்க வேண்டும். நாங்கள் இருவரும் "வெற்றி திருமகளை" தமிழ்நாடு மக்களுக்கு பெற்று தருவோம். பழனிச்சாமியும், ஸ்டாலினும் மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளார்கள் என்று மக்கள் பேசி வருகிறார்கள். ஓபிஎஸ் இருக்கையை மாற்றியதற்கு காரணம் பழனிச்சாமியும் ஸ்டாலினும் கூட்டணி வைத்தது தான். மங்காத்தா படம் போல் ஸ்டாலினும், பழனிச்சாமியின் உள்ளே வெளியே என்று ஆட்டம் ஆடி கொண்டிருக்கிறார்கள். அதனை நாங்கள் முறியடிக்காமல் விடமாட்டோம்” என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget