மேலும் அறிய

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்

மூத்த நிர்வாகிகள், தொண்டர்களை உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அனாதையாகிவிட்டார் - எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா கோவிலுக்கு சென்றார். அம்மா கோவிலில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா., எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து புதிதாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற ஆர்.பி.உதயகுமாருக்கு கட்சி நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆர்.பி.உதயகுமார், அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு அ.தி.மு.க., துரோகிகளுடன் தி.மு.க., அரசு உடந்தையாக இருந்தது. அதன் விளைவாக அ.தி.மு.க., தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
மூத்த நிர்வாகிகள் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையை ஒ.பி.எஸ்., உதாசினப்படுத்தினார். மாவட்ட செயலாளர்கள், தலைமைகழக  நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கருத்துக்கள் சொன்னார்கள்.  ஆனால்., தலைமை பொறுப்பில் இருந்துகொண்டு தொண்டர்கள் நிர்வாகிகள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் சர்வாதிகார போக்குடன் இருந்ததால் இன்றைக்கு சவுக்கடியாக இன்று ஓ.பி.எஸ் அரசியல் அநாதையாகிவிட்டார். குடியரசு தலைவர் பிரிவு உபசார விழாவிலும் அ.தி.மு.க.,வின் ஒற்றை முகமாக அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளரா கலந்து கொள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்ப்பட்டுள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது என்பதற்கு கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு சம்பவம் எடுத்துக்காட்டாக உள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவம் தமிழக அரசிற்கு தலைகுனிவாக உள்ளது. கள்ளக்குறிச்சியில் மாணவின் இறப்பு சம்பவம் குறித்து தமிழக முதல்வர் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும். உண்மையான அதிமுகவானது., இன்றைக்கு திமுகவையும் உண்மையான அதிமுகவை எதிர்த்த துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் பாடம் புகட்டும் வகையில் 25ம் தேதி எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் திமுக அரசின் மின்சார உயர்வு, சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவைகள் முன்வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

உதாசீனப்படுத்தியதால் ஓபிஎஸ் இன்று அரசியல் அநாதையாகிவிட்டார் - ஆர்.பி.உதயகுமார்
துரோகத்தை வேறருக்கும் வகையில் வருகின்ற 26 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் நடைபெறும் போராட்டம் இருக்கும். வரும் தேர்தல்களில் பாண்டிய மண்டலம், சோழ மண்டலம், அதியமான் மண்டலம், கொங்கு மண்டலம், மத்தியமண்டலம் என எந்த மண்டலமாக இருந்தாலும் அனைத்திலும் அ.தி.மு.க.,வின் ஒற்றைத் தலைமை அண்ணன் எடப்பாடி பழனிசாமியின் வெற்றி கோட்டையாக இருக்கும் என தெரிவித்தார்.
 
முன்னதாக 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்ட T. குண்ணத்தூர் அம்மா கோவிலில் வைக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளரான வைத்தியலிங்கம் ஆகியோர் படம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில்  9ஆம்  நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி  உலா
கரூர் ரெங்கநாத சுவாமி ஆலயத்தில் 9ஆம் நாள் நிகழ்ச்சியில் ஆண்டாள் திருக்கோலத்தில் திருவீதி உலா
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
மோடிக்கு ஷாக்.. ஆதரவை வாபஸ் பெற்ற நிதிஷ் குமார்.. கவிழ்கிறதா பாஜக அரசு?
"இதை மட்டும் பண்ணாதீங்க சிந்தனை திறன் குறையும்" மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அட்வைஸ்!
Embed widget