மேலும் அறிய

போலீஸ் தாக்கியதில் 2 பேர் இறந்ததை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் - நீதிமன்றம் அனுமதி மறுப்பு

நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைை தெரிவிக்க அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.

காவல்துறையினர் தாக்கியதில் இருவர் இறந்ததை கண்டித்து மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதி கோரிய வழக்கில், சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்த மகாராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், "கடந்த 2018 மார்ச் மாதம் மாணிக்கராஜ், முருகேசன் ஆகிய இருவரும் தாழையூத்து துணை காவல் கண்காணிப்பாளரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டனர். பின்னர் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மார்ச் 30,31 ஆகிய இரு நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

துணை காவல் கண்காணிப்பாளர்  காவலில் வைத்து தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர். வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் 25 காவல்துறையினர் உட்பட தொடர்பு இருப்பதாக குறிப்பிடும் நிலையில் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிபிசிஐடிக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இது தொடர்பாக உரிய நிவாரணம் கோரி உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பைை தெரிவிக்க அனுமதிக்க கோரி மனு அளித்தும் அனுமதி வழங்கப்படவில்லை.

எனவே மதுரை, நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்ட நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பின் உறுப்பினர்கள் வீடுகளில் ஆகஸ்ட் 14ஆம் தேதி கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சுதந்திர தினத்தை ஒட்டி மூன்று தினங்களுக்கு எந்த ஒரு ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற விதி ஏற்கனவே உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மற்றொரு வழக்கு
 
நெல்லை மாவட்டத்தில் அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்பட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில்  கல்குவாரியில் கடந்த மே 14ஆம் தேதி  இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில்  4 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள்,  கிரசர்கள் இயங்க  தடை விதிக்கப்பட்டது . மேலும் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக பல குவாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பித்தார்.
 
இந்நிலையில் நெல்லை மாவட்ட குவாரிகள் சங்கம் சார்பாக முறையாக அனுமதி பெற்று செயல்படக்கூடிய குவாரிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரால் விதிக்கப்பட்ட அபராத தொகை ரத்து செய்து வழக்கம் போல் குவாரிகளில் இருந்து கற்களை லாரிகள் மூலம் ஏற்றி செல்ல  டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க நெல்லை  புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
 
அரசின் முறையான அனுமதி பெற்ற குவாரிகள் செயல்படவும் கல்,  ஜல்லி  மற்றும் எம்-சான்ட் போன்ற  கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உத்தரவு பிறப்பித்த நீதிபநி  விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 300 கோடி ரூபாய் மாவட்டம் நிர்வாகம் சார்பாக குவாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது இதை மறுபரிசீலனை செய்யவும் என்றும் குவாரிகளை  மீண்டும்  அளவீடு செய்து விதிமுறை மீறி இருந்தால் அபராதம் விதிப்பது குறித்து  புதிய நோட்டீஸ் வழங்கலாம் எனவும் கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரை வழக்கறிஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி: சட்டத் துறையின் எதிர்காலம்?
மதுரை வழக்கறிஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி: சட்டத் துறையின் எதிர்காலம்?
மதுரையில் (13.10.2026) ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை - முழு லிஸ்டை பாருங்க !
மதுரையில் (13.10.2026) ஒரே நாளில் ஏகப்பட்ட இடத்தில் மின்தடை - முழு லிஸ்டை பாருங்க !
SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !
SIR இல்லை என்றால் TVK 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் - அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி !

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget