மேலும் அறிய

’சேற்றை பூசியும் சாக்கு பைகளை ஆடையாக அணிந்தும் நேர்த்திக்கடன்’- கமுதி அருகே விநோத கிராமம்...!

’’சாக்கு அணிந்து வந்து வழிபாடு செய்து வந்தால் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் தீய சக்திகளிடம் இருந்து அழகுவல்லி அம்மன் காப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்’’

நேர்த்திக்கடன் என்றால் கோயில் திருவிழா சமயங்களில் தேர் இழுத்தல், காவடி தூக்குதல், அலகு குத்துதல், தீ மிதித்தல், மொட்டைத் தலையில் தேங்காய் உடைத்தல், கழுவேற்றுதல் (தசாவதாரம் கமல் போன்று முதுகில் கொக்கி மாட்டித் தொங்க விடுதல்) உள்ளிட்ட  நேர்த்திக்கடன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவில் காலையில் சேத்தாண்டி வேடமிட்டு, அதாவது உடல் முழுவதும் சேற்றையும் சகதியையும்  பூசி அது நன்கு உலர்ந்த பின்பு கையில் வேப்பமங்குலைகளை  பிடித்துக்கொண்டு கோவிலில்  அடிக்கும் மேல தாளங்களுக்கு ஏற்ப கோவில் முன்பாக ஆடி நேர்த்திக் கடனை நிறைவேற்றுகிறார்கள். அதேபோன்று மாலையில் உடல் முழுவதும் சாக்குகளை பேண்ட் சட்டைகளாக தைத்து அதை  உடையாக அணிந்து  முளைப்பாரி செல்லும் பொழுது அதன் முன்பாக சாக்கு வேடமணிந்து ஆடிச் செல்கின்றனர். 


’சேற்றை பூசியும் சாக்கு பைகளை ஆடையாக அணிந்தும் நேர்த்திக்கடன்’- கமுதி அருகே விநோத கிராமம்...!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் உள்ள அழகுவல்லி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 5ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழாவின் நிறைவு நாளில் முளைப்பாரி எடுக்கும் விழா நடைபெற்றது. இதனையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து ஆண்கள், சிறுவர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசி, சேத்தாண்டி வேடம் அணிந்தும், அக்கினிச்சட்டி, பால்குடம் வேல்குத்துதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடனைச் செலுத்தினர். மாலையில் முளைப்பாரி ஊர்வலத்துடன், பக்தர்கள் உடல் முழுவதும் வைக்கோல் நிரப்பப்பட்ட சாக்கு பையை சுற்றிக் கொண்டு வலம் வந்து நேர்த்திக்கடன்  செலுத்தினர்.


’சேற்றை பூசியும் சாக்கு பைகளை ஆடையாக அணிந்தும் நேர்த்திக்கடன்’- கமுதி அருகே விநோத கிராமம்...!

’’வேண்டுதல் நிறைவேறுகிறது’’

பக்தர்கள் சேத்தாண்டி வேடம் அணிந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றியதும் சாக்கு வேடமணிந்ததும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது. அம்மனிடம் வேண்டுதல்  வைத்து நிறைவேறிய பக்தர்கள் விநோத முறையில் சாக்கு வேடம் அணிந்து மேளதாளங்களுடன் கிராமத்தை சுற்றிவந்து கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

இவ்வாறு சாக்கு அணிந்து வந்து வழிபாடு செய்து வந்தால் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் தீய சக்திகளிடம் இருந்து அழகுவல்லி அம்மன் காப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். நேர்த்திக்கடன் செய்து முடித்தபின் அழகுவல்லி அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த வினோதமான வழிபாட்டை காண கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் செங்கப்படை கிராமத்திற்கு திரண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தில் தீ மிதிப்பது, தலையில் தேங்காய் உடைப்பது போன்ற நேர்த்திக்கடன்கள் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் சாக்கு பைகளை ஆடையாக அணிந்து சேற்றை உடலில் பூசி நேர்த்தி கடனை நிறைவேற்றும் நிகழ்வு பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்துள்ளது

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget