மேலும் அறிய

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

’’142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் கேரளா பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது’’

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணையானது தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகிறது. முல்லைப் பெரியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 155 அடி ஆகும். 15.5 டிஎம்சி தண்ணீர் சேமிக்கலாம். 142 அடி வரை தண்ணீர் தேக்கிக் கொள்ள தமிழகத்துக்கு உரிமை உண்டு என கடந்த 2006 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேபி அணையை பலப்படுத்தி விட்டு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் கடந்த 2014 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வரலாற்று மிக்க ஒரு சிறப்பு தீர்ப்பு அளித்தது.

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 130 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து  138.5 அடியாக உயர்ந்தது. இதற்கிடையே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தால் பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீரை வைகை அணைக்கு திறக்க வேண்டும் என்று கேரள அரசு சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் கேரள அரசு ரிட் மனு தாக்கல் செய்திருந்தது இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றம் நீதிபதி ஏ எம் கான்வில்கர் தலைமையில் விசாரிக்கப்பட்டது அப்போது இரு மாநில தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஒரு உத்தரவை பிறப்பித்தனர் அதில் முல்லைப் பெரியாறு அணையின் கண்காணிப்புக்குழு பரிந்துரைத்துள்ள 139.50 அடி வரையிலான தண்ணீர் நவம்பர் 11ஆம் தேதி வரை தேக்கி வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது ஆனால் இந்த உத்தரவு வருவதற்கு முன்பே கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களிடம் 29 அம் தேதி காலை 7.30 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட போவதாக ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

அதன்படி கேரளா சார்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் பொதுப்பணி துறையினர் முன்னிலையில் அணை 29  தேதி காலை 7.30 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 534 அடி உபரி நீர் இரண்டு மதகு பகுதியிலிருந்து கேரளா பகுதிக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திறப்புக்கு தேனி மாவட்ட விவசாயிகள் மட்டும் பொது மக்களிடையே எதிர்ப்பும் கிளம்பியது. தேனி மாவட்ட மக்கள் 142 அடி வரை தண்ணீர் தேக்க வேண்டும் என பல நாட்கள் கோரிக்கை வைத்திருந்த இந்த சூழலில் கேரளாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பொதுப்பணித்துறையினர் யாருக்கும் தகவல் கொடுக்காமல் அணையில் இருந்து உபரி நீரை திறந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களிலேயே அணையிலிருந்து மேலும் மற்றொரு மதகுகள் வழியாக அணையில் இருந்து கூடுதல் தண்ணீரை இறந்து விட்டனர்.

முல்லை பெரியாறு அணையில் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர்கள் குழு இன்று ஆய்வு...!

இந்த நிலையில் அடுத்த ஒரு சில நாட்களில் முல்லைப் பெரியாறு அணையில் ‌ மத்திய ஐந்து பேர் கொண்ட துணை குழு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, நீர் கசிவு, கேலரி ,கேரள பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர்கள் சட்டம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது கூடுதல் தண்ணீராக வினாடிக்கு 2000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த நிலையில்  இன்று முல்லை பெரியாறு அணையை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலான அமைச்சர் குழு மற்றும் தமிழக அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget