மேலும் அறிய

pongal 2022 | நெகட்டிவ் சான்றிதழ்.. இரு தடுப்பூசி.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த விதிகளை பட்டியலிட்ட அமைச்சர்..

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தை பொங்கலை முன்னிட்டு வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு,  ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.  இந்நிலையில் வரும் 16ம் தேதி அரசு சார்பில்  நடைபெற உள்ள உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாட்டு பணிகள் முகூர்த்தகால் நடப்பட்டு துவங்கியது.  வாடிவாசல் அருகேயுள்ள முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னர் விழா கமிட்டியினர்  முகூர்த்த கால் நட்டனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் வர்ணம் தீட்டுவது, கேலரி அமைப்பது காளைகளுக்கான மருத்துவ பரிசோதனை செய்யுமிடம், காளைகள் நிறுத்தி வைக்கும் இடத்தை தயார் செய்யும் பணிகள் துவங்க உள்ளது. 
 
இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஜல்லிக்கட்டு போட்டி கட்டுப்பாடுடன் நடத்துவது குறித்து அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர்  ஜல்லிக்கட்டு நடத்துவது  தொடர்பாக  மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் பத்திரப் பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தென் மண்டல ஐஜி அன்பு, மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், அனைத்து துறை அரசு அதிகாரிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கமிட்டியினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.மூர்த்தி கூறுகையில்...,” தமிழ்நாடு முதல்வர் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சில விதிகளுக்கு உட்பட்டு வழங்கி உள்ளார். தமிழ்நாடு அரசு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று ஜல்லிக்கட்டு நடக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர்  தலைமையில், மாநகராட்சி ஆணையர், தென் மண்டல, உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் கலந்துகொள்ளும் காளைகளை ஆன்லைனில்  முன்பதிவு செய்ய வேண்டும். ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில்  300  மாடு  பிடி வீரர்களுக்கு மிகாமலும்,150 உள்ளுர் பார்வையாளர்கள் மட்டும் கலந்து கொள்வர்கள், மற்றவர்கள் கலந்து கொள்ள இயலாது.

pongal 2022 | நெகட்டிவ் சான்றிதழ்.. இரு தடுப்பூசி.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த விதிகளை பட்டியலிட்ட அமைச்சர்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்ட போட்டியில் பங்கேற்க இயலாது, பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற  இரண்டு போட்டியில் பங்கேற்க இயலாது, அதே போல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் காளையர்களுக்கு மற்ற இரண்ட போட்டியில் பங்கேற்க இயலாது, போன்ற கொரோனா கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடைபெறும். அங்கு வரும் மாடுபிடி வீரர்கள்  இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதேபோல் காளையுடன் வரும் மாட்டின் உரிமையாளர், உதவியாளர் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் வைத்து இருக்க வேண்டும்.  வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள் பங்கேற்க  அனுமதி இல்லை.

pongal 2022 | நெகட்டிவ் சான்றிதழ்.. இரு தடுப்பூசி.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த விதிகளை பட்டியலிட்ட அமைச்சர்..

 நாளை முதல் அந்தந்த பகுதிகளில்  உள்ள காளை மற்றும் மாடுபிடிவீரர்கள் ஈ- சேவை மையங்களுக்குச் சென்று பதிவு செய்து கொள்ளலாம். மொத்தமாக 150 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர். பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு தனி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். முறைகேடு இல்லாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும், போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு மாடுகள் குறித்த தகவல் முந்தைய நாள் தெரிவிக்கப்படும் இதன் மூலம் ஜல்லிக்கட்டு போட்டியில் நடைபெறும் முறைகேடு தடுக்கப்படும். பரிசு பொருட்கள் வழங்குவது குறித்து அந்தந்த கிராம கமிட்டியினர்தான் முடிவு செய்வார்கள்.

pongal 2022 | நெகட்டிவ் சான்றிதழ்.. இரு தடுப்பூசி.. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி குறித்த விதிகளை பட்டியலிட்ட அமைச்சர்..

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை  மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடத்தும். இரண்டு தரப்பும் ஒன்று சேர்ந்து வந்தால்  ஜல்லிக்கட்டு கமிட்டி போட்டி நடத்த அனுமதிக்கப்படும். தற்போது மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!

தலைப்பு செய்திகள்

தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
தமிழக வெற்றி கழக அரசு 100 நாள்: இனிப்பு, ரோஜாப்பூ வழங்கி கொண்டாடிய மதுரை தவெக தொண்டர்கள் !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மதுரை விமான நிலையத்தில் போலி பாஸ்போர்ட்: பிறந்த தேதி மாற்றியவர் கைது!
மேகமலை புலிகள் சரணாலயம்:
மேகமலை புலிகள் சரணாலயம்: "புலிக்குட்டி கொடுங்கள்!" - கிராம மக்களின் வினோத எதிர்ப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
Embed widget