மேலும் அறிய

PTR on Annamalai: அண்ணாமலை கேட்ட கேள்வி.. புரளியை கிளப்ப வேண்டாம்.. பதிலடி கொடுத்த அமைச்சர் பி.டி.ஆர்

PTR on Annamalai: எனது மகன்கள் இருமொழிக்கொள்கையில் படித்தவர்கள்  - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி.

சட்டத்துக்கு விரோதமா செயல்பட்டால் நாங்க பணிந்து போறவர்கள் இல்லை, என்றைக்கும் இரண்டு மொழி தான் எங்களுக்கு இரட்டை மொழிக் கொள்கைதான்.

மும்மொழிக் கொள்கை தோல்வி அடைந்து விட்டது.

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் டி.எம் கோர்ட் சந்திப்பில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..,” தேசிய கல்விக் கொள்கை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலையோ, எங்கேயும் நிறைவேற்றப்படாத ஒரு விருப்ப கொள்கை.
 
இந்த கொள்கையை இன்றைக்கு பாஜக அரசாங்கம் சட்டத்துக்கு விரோதமாக, சட்டமைப்புக்கு விரோதமாக இதை நீங்கள் அமல்படுத்தினால் தான் உங்களுக்கு வரவேண்டிய நிதியை கொடுப்போம் என்று சர்வாதிகாரத்தனதுடன் ஒரு ரவுடித்தனத்துடனும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். தென் மாநிலங்களில் அந்த அளவுக்கு இந்தி தெரிந்த ஆசிரியர் கிடைக்கவில்லை எனவே மும்மொழிக் கொள்கை தோல்வி அடைந்து விட்டது. 

புரளி கிளப்புராங்க

ஒரு பள்ளி திட்டத்தை உருவாக்கும் போது கல்வி திட்டத்தை உருவாக்கும் போது சமூகநீதிக்கு ஏற்ப எல்லா குழந்தைகளுக்கும் செய்யவேண்டும். அதாவது ஏழை எளிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் சரி, கொஞ்சம் முன்னேறிய குடும்பத்தில் இருந்து வந்தாலும் சரி, நகர்ப்புறத்தில் இருந்து வந்தாலும் சரி, கிராமப்புறத்தில் இருந்து வந்தாலும் சரி, மலைப்பகுதியில் நடந்தாலும் சரி, எல்லா குழந்தைகளுக்கும் ஒரே கல்வி திட்டம் கத்துக் கொடுத்தால்தான் அது சரி. அரசோட கடமையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் சமூக நீதிக்கு ஏற்ப செயல்படுற சரியான முறை.
 
அதற்கு மேல் யாருக்கெல்லாம் வேணுமோ யாரெல்லாம் தனி டியூஷன் எடுக்கிறார்களோ, யாரெல்லாம் என்ன பண்றாங்க அனைவருக்கும் ஒரே கல்வியை கொடுக்க வேண்டியது அதை நாம சிறப்பாக செய்திருக்கிறோம். எத்தனையோ பேர் கூறுகிறார்கள் வேறு எந்த மாநிலத்தை விட தமிழ்நாடு தான் சிறப்பான விளைவுகள் கிடைத்தற்கு எந்த அளவு பொருள் எடுத்தாலும் இதை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை இந்த வாதம் எல்லாம் அவர்களால் எதிர்க்க முடியாது அதனால்  புரளி  கிளப்புறாங்க 

அண்ணாமலைக்கு பதில்

முதலில் புரளி அமைச்சர் பசங்க எங்க படிக்கிறாங்க, அமைச்சர் பேரங்க எங்க படிக்கிறாங்க, எங்க 34 பேரோட பசங்க எங்க படிக்கிறாங்கன்றது முக்கியமில்லை. எட்டு கோடி மக்களுக்கு என்ன கல்வி திட்டம் என்பது தான் முக்கியம். எந்த வாதத்திலும் தனிநபருக்காக திசை திருப்பும் போது இது மிகவும் தோல்வியடைய கூடிய வாதத்தை தான். திசை திருப்புறாங்கன்னு நம்ம எண்ணனும் ஆனாலும் நான் ஒரு உண்மையை இங்கே சொல்ல விரும்புகிறேன். ஏதோ ஒரு கட்சித் தலைவர் இன்னைக்கு எதோ ஒரு பேட்டியில் கொண்டு சொல்லி இருக்கார் அமைச்சர் பி.டி.ஆர் உடைய பசங்க எத்தனை மொழி படித்தார்கள் என்று சொல்லட்டும் என்று. 
 
நான் தெளிவாக விளக்கம் என்று சொல்கிறேன், எனக்கு இருக்கிறது இரண்டே இரண்டு புதல்வர்கள். என் அப்பா பெயருக்கு ரெண்டு பேருக்கும் அவங்க ரெண்டு பேரும் பிரிச்சு வச்சிருக்கேன். ஒருத்தர் பேர் பழனி ஒருத்தர் பெயர் வேல் இரண்டு பசங்களும் எல்கேஜியிலிருந்து ஸ்கூல் முடிக்கிற வரைக்கும் இரட்டை மொழிக் கொள்கையில் தான் படித்தார்கள் யாருக்கெல்லாம் விளக்கம் தேவையோ எடுத்துக்கட்டும்.

எல்லாத்துக்கும் இரண்டே இரண்டு மொழிதான்:

அடுத்து நான் கூறுகிறேன் அவர் சொல்கிறார்கள் 52 லட்சம் பேரு அரசு பள்ளியில் படிக்கிறாங்க அவங்க மட்டும் ரெண்டு மொழிதான், 56 லட்சம் பேர் 58 லட்சம் பேரு தனியார் பள்ளியில் அப்படியே கிடையாது. கல்வித் திட்டத்தை பொறுத்திருக்கு 52 லட்சம் பேர் வேணா தமிழ்நாடு பள்ளிகளில் படிக்கலாமே தவிர நிறைய தனியார் பள்ளிகளும் அதாவது தமிழ்நாடு கல்வி திட்டத்தின் ஸ்டேட் போர்டில் படிக்கிறார்கள்.
 
அவங்களுக்கெல்லாமும் இரண்டு மொழி தான் அதான் எல்லாத்துக்கும் சமம் அதுக்கு மேல் சொல்றேன் சிபிஎஸ்இ-யில் இன்டர்நேஷனல் போர்டுல எல்லாம் இரண்டு மொழி கொள்கைதான் அதிலும் அது ஐபி போர்டாக இருக்கட்டும் ஏபி போர்டாக இருக்கட்டும். சில ஐஜிசி கேம்பிரிட்ஜ் போர்டா இருக்கட்டும் இதில் எல்லாத்துக்கும் இரண்டே இரண்டு மொழிதான்.

தடை செய்யவில்லை

ஆனால் இந்த பொருள் எல்லாம் எதோ பணக்காரங்க மட்டும் மூணு மொழியில் நாங்க திணிக்கிறோம். ஆனால் ஏழைக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றெல்லாம் சொல்வது ரொம்ப தவறு. நம்ம எல்லாத்துக்கும் இரண்டு மொழி தான் தேவை என்பதை நாம் முன் வைக்கிறோம். யார் வேண்டுமானலும் எங்க வேண்டுமானலும் அதற்கு மேல் படிக்கிறதுக்கு எந்த தடையும் இல்லை என நான் பல இடங்களில் கூறி இருக்கிறேன். இந்தியை பிரமோஷன் செய்யும் ஹிந்தியை முன்னெடுக்கும் தக்ஷின் பாரத் ஹிந்தி பிரச்சார சபா என்ற அமைப்பு சென்னையில் தலைமை அலுவலகத்தை வைத்து அதற்கு மேல் திருச்சியில் ஒரு அலுவலகத்தை வைத்து எங்கெங்கெல்லாம் எப்ப எல்லாம் முடியுமோ, ஒன்றிய அரசாங்கத்தினுடைய நிதியை வைத்து இன்றைய ஹிந்தியை பரப்பிக் கொண்டிருக்கிறது. 
 
அதை நாங்கள் என்னைக்கும் தடை செய்யவில்லை. என்னைக்கும் ஏன் என்று கேட்கவில்லை யாரெல்லாம் விரும்புனீங்களா போய் கத்துக்கோங்க கட்டாயப்படுத்த மாட்டோம் எங்களுக்கு இருக்கிற கல்வியை கெடுக்கிற அளவுக்கு மூணாவது மொழியை  அறிமுகம் செய்ய மாட்டேன். நீங்க எவ்வளவு பணம் கொடுத்தாலும் சரி கொடுக்கலைன்னாலும் சரி நீங்க சட்டத்துக்கு விரோதமா செயல்பட்டால் நாங்க பணிந்து போறவர்கள் இல்லை என்றைக்கும் இரண்டு மொழி தான் எங்களுக்கு இரட்டை மொழிக் கொள்கைதான்” என்றார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
ABP Premium

வீடியோ

அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
Embed widget