மஹாளய அமாவாசை: சுருளி அருவி, பெரியகுளம் வராக நதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்! கிருஷ்ணர் வீதி உலா!
சுருளி அருவி, வராக நதியில் மஹாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
பிரபலமான சுற்றுலா தலமாகவும் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்கும் சுருளி அருவியில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபாடு. இதேபோல் பெரியகுளம் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமி கோவில் அருகே உள்ள வராக நதியில் மஹாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபலமான சுற்றுலா தலமாகவும் ஆன்மீக ஸ்தலமாகவும் விளங்குகிறது சுருளி அருவி. இங்கு வரும் உள்ளப் பூத நாராயணன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அமாவாசை பெளர்ணமி நாளில் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்ய அதிகமானோர் வந்து செல்வர் இந்த நிலையில் இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் சுருளி அருவியில் புனித நீராடி பிண்டம் வைத்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.
இதேபோல் தேனி அருகே உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள அருள் மிகு பாலசுப்ரணிய திருக்கோவில் வராக நதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஆற்றில் இருகரைகளிலும் எதிர் எதிரே ஆண், பெண் மருத மரங்கள் உள்ள நிலையில் இறந்த முன்னோர்களுக்கு வருடந்தோரும் திதி மற்றும் தர்பணம் கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருவது வழக்கம். இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏராளமான பொதுமக்கள் பெரியகுளம் பாலசுப்ரமணியசுவாமி திருக்கோவில் அருகே உள்ள வராக நதி ஆற்றில் தங்களின் முன்னோர்களுக்கு வழிபாடு நடத்தி தேன் ,பால் ,பச்சரிசி வாழைப்பழம், எல் போன்ற பொருட்களைக் கொண்டு பிண்டம் செய்து வைத்து தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டு, பிண்டத்தை வராக நதி ஆற்றங்கரையில் கரைத்து தனது முன்னோர்களை வழிபட்டனர்.
இந்நிகழ்வில் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்தனர். இதேபோல் புரட்டாசி முதல் சனிக்கிழமையும் முன்னிட்டு பெரியகுளத்தில் கிருஷ்ணர் ராதே சுவாமி வீதி உலா நடைபெற்றது. பெரியகுளம் தென்கரை அக்கிரகாரத்தில் நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைந்துள்ளது. இந்த பிரார்த்தனை மையத்தில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு கிருஷ்ணன் ராதைக்கு அலங்காரம் செய்வதற்கான பெண் பக்தர்கள் மூலமாக துளசி மாலை கட்டப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கிருஷ்ணன் ராதே சுவாமிக்கு பால் ட்ரை பன்னீர் சந்தனம் குங்குமம் விபூதி மஞ்சள் தேன் பழங்கள் மலர்கள் உள்ளிட்ட அபிஷேக பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு துளசி மாலை மற்றும் பல்வேறு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இந்த புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஹரே ராமா ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா என்ற கோஷங்களை எழுப்பி கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின்பு கிருஷ்ணன் ராதே சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லாக்கில் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம், வடக்கு அக்ரஹாரம், வள்ளுவர் சிலை. பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்பு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரார்த்தனை மையம் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டது.





















