மேலும் அறிய
5 ரூபாய் கேண்டீன்: வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம்! சுயதொழில் மூலம் சாதனை படைக்கும் மதுரை பெண்கள்
ஐந்து ரூபாய் கேண்டின் மூலம் உருவான ‘சிறிய கேட்டரிங் குழு’ சமூக சேவையில் புதிய வழிகாட்டி, குவியும் பாராட்டுகள்.

ஐந்து ரூபாய் கேண்டீன்
Source : whats app
குடும்பப் பெண்கள் மட்டுமன்றி, மகளிர் கல்வி, சிறிய தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சுத்தம் என அனைத்தும் சேர்ந்து முன்னேற முடியும் என்பதே இது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஐந்து ரூபாய் கேண்டின்
மதுரை திருமங்கலம்: முக்கிய நகரங்களுக்குப் புறமாக, சமூகத்தின் பின்தங்கிய மக்களுக்கு ஆதரவாக செயல்படும் பல அமைப்புகள் இருக்கின்றன. அதில் ஒன்றாக Buhari Junction YouTube சேனல், தனது ஐந்து ரூபாய் கேண்டின் முன்மாதிரியாக, தற்போது மேலும் ஒரு முக்கிய சமூக முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. குறைந்த விலையில் பொன்னி அரிசி சாதம், சாம்பார் ரசம் என தரமான உணவு வழங்கும் நோக்குடன் கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐந்து ரூபாய் கேண்டின், இன்று திருமங்கலத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது. ஆரம்பத்தில் சொந்தமாக கிச்சன் அமைப்பது குறித்த யோசனை இருந்த போதும், உணவு தயாரிப்பு அனுபவம் குறைவு மற்றும் நிரந்தரமாக நேரம் ஒதுக்க முடியாத நிலை காரணமாக, ஒருவித சமூக நல யோசனையாக உள்ளூர் பெண்களை இணைத்து சுயதொழில் குழுவாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
சுயதொழில் முனைவோர்
சமுதாயத்தில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டத்தை முதற்கட்டமாகச் செயல்படுத்தியுள்ளது. கேண்டினைக்கான நிதி buhari junction YouTube சேனலின் சப்ஸ்கிரைபர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் கிடைத்தாலும் உணவு தயாரிப்பதற்கு சிறந்த சமூக முன்னெடுப்பை தேர்ந்தடுத்துள்ளனர், திருமங் கலம் பகுதியில் சமையல் அனுபவம் உள்ள ஐந்து பெண்களை தேர்ந்தெடுத்து, சம்பளம் வாங்கும் தொழிலாளிகளாக அல்லாமல், முழுமையான சுயதொழில் முனைவோர்களாக உருவாக்கி, கேண்டின் தேவைகளுக்கு சத்தான, சுகாதாரமான உணவை தயார் செய்யச் செய்யப்பட்டது.
சிறிய வருமான வாய்ப்பு
முத்து ஈஸ்வரி என்ற ஒருங்கிணைப்பாளர் தலைமையில், இந்த குழு ஒற்றுமையாக இயங்கி வருகிறது. தினமும் மாவு அரைத்து விற்கும் முனியம்மாள் அவர்கள், தனது சமையல் அனுபவத்தை இங்கு பயன்படுத்தத் தொடங்கியுள்ளார். மேலும், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படிக்கும் ஒரு மாணவி, தனது குடும்பச் செலவுகளை சமாளிக்க பகுதி நேரமாக இதில் பங்கேற்று வருகிறார். இதன் மூலம் குடும்ப வாழ்க்கையும் கல்வியும் பாதிக்காமல், ஒரு சிறிய வருமான வாய்ப்பையும் பெற முடிகிறது.
குறைந்த லாபத்தில் அதிகமான நன்மை
இந்த குழு, Buhari Junction ஐந்து ரூபாய் கேண்டினுக்கு மட்டுமன்றி, தள்ளுவண்டி டிபன் செண்டராகவும் சாலையோர விற்பனையில் தொடர்ந்து சேவை செய்கிறது. குறைந்த லாபத்தில் அதிகமான மக்களுக்கு நன்மை செய்யும் இந்த மாடல், உண்மையில் இன்று பல இடங்களில் தேவையானது. பெண்களின் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் இவர்களுக்கு தேவையான பயிற்சி, பொருட்கள், வாடிக்கையாளர்கள் ஆகியவை அனைத்தையும் Buhari Junction மற்றும் அன்பு சூழ் உலகு அறக்கட்டளை சார்பில் ஒருங்கிணைத்து தரப்படுகிறது.
எல்லோரின் துணை தேவை
“நாங்கள் முதலில் இதை ஒரு சாதாரண கேண்டின் திட்டமாகவே நினைத்தோம். ஆனால் உள்ளூர் பெண்களின் ஆதரவு, அவ்வாறு பார்த்தால் அவர்களின் குடும்ப நிலைமை, அனைத்தும் பார்த்த போது இது அவர்களுக்கு சுயதொழில் வாய்ப்பாக மாற வேண்டுமென்ற விருப்பம் வந்தது. இன்று அவர்கள் தங்களுக்கே குழுவாக நின்று தங்களின் திறமையையும் குடும்ப நலனையும் பாதுகாக்கிறார்கள். இதற்கு எல்லோரின் துணை தேவை,” என்று Buhari Junction யூடியூப் சேனலின் புஹாரி ராஜா தெரிவித்தார்.
புதிய திட்டம் என்ன?
இந்த முயற்சியில் குடும்பப் பெண்கள் மட்டுமன்றி, மகளிர் கல்வி, சிறிய தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் சுத்தம் என அனைத்தும் சேர்ந்து முன்னேற முடியும் என்பதே இது மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் இன்றும் ஏராளமான பெண்கள் சமையல், தையல், கூலி வேலை போன்றவற்றை மட்டுமே வேலைவாய்ப்பாக நினைக்கிறார்கள். ஆனால் சரியான ஒருங்கிணைப்பும், சுய நம்பிக்கையும் இருந்தால் சிறிய குழுவாகவே நிதியாக, சமூக பங்களிப்புடன் முன்னேறும் வாய்ப்பு அதிகம் என்பதே இதன் முக்கிய செய்தி. நிகழ்காலத்தில் இந்த குழு, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறது. கூடவே, சிறிய ஆர்டர்கள், வீட்டு நிகழ்வுகள், வீட்டு கேட்டரிங் ஆகியவற்றையும் சமாளிக்க திட்டமிட்டு வருகின்றனர்.
வெற்றிகரமாக முதல் மாதம்
இதற்கு வரும் நாட்களில் மேலும் பெண்கள் இணைந்து, தனிப்பட்ட சுயதொழில் பயிற்சி, சிறிய கடை அமைப்புகள், புதிய டிபன் சென்டர் தொடக்கம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. நமது ஐந்து ரூபாய் கேண்டின், இம்மாதம் தனது முதல் வெற்றிகரமான மாதத்தை நிறைவு செய்துள்ளது. என்றும் 5 ரூபாய் கேண்டீன் குழு தெரிவித்தனர். மேலும் இந்த குழுவை வாழ்த்த - 9677765212 என்ற எண்ணில் வாழ்த்தலாம்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
க்ரைம்
அரசியல்





















