Madurai: மதுரையில் பங்குனித் திருவிழா: பறவை காவடி, தேர் காவடி, பால்காவடி - நேர்த்திக்கடன் செலுத்திய 15 ஆயிரம் பக்தர்கள்..!
மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
மதுரை ஜெய்ஹிந்திபுரத்தில் உள்ளது மிக பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோயில். இந்த கோயிலின் 71வது ஆண்டு பங்குனி உற்சவ விழா கொடியேற்றம் மார்ச் 17ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 31ம் தேதி மாலை காப்பும் கட்டும் நிகழ்வும் அதனை தொடர்ந்து அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
பங்குனி உத்திரம்:
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்வாக இன்று அதிகாலை 5 மணி முதல் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலில் அலகு குத்தியும், பால் குடம் சுமந்துவந்தும், வேல்குத்தியபடியும், பறவை காவடி எடுத்தபடியும் ஊர்வலமாக வைகை ஆற்றிற்கு சென்று அங்கு அம்மனுக்கு பூஜை செய்தனர்.
மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா, 15 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்" பிரமிக்க வைத்த பறவை காவடி , தேர் காவடி உள்ளிட்ட காவடிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது !#madurai | #spritual | #veerakaliyamman | #Temple | @abpnadu pic.twitter.com/5bVUNPU1vK
— arunchinna (@arunreporter92) April 7, 2023
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்