மேலும் அறிய
Advertisement
சாவு வீட்டில் ஜாலியோ ஜிம்கானா... இறந்தவரை ஹேப்பியாக அனுப்பி வைத்த சூப்பர் குடும்பம்..!
கலை நிகழ்ச்சிகளுடன் இறுதி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே மூதாட்டியின் மறைவிற்கு, அவர் ஆசைப்படி ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் அவரது 70க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள் இறுதி மரியாதை செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி கலாச்சாரம்
விசேஷ வீடு என்றாலும், துக்க வீடு என்றாலும் சரி மதுரை, உசிலம்பட்டி பகுதியில் சவுண்டு களைகட்டும். எல்லா நிகழ்வுகளுக்கும் ரேடியோ செட்டுகள் பிரதானம். உசிலம்பட்டி பகுதி மக்களுக்கு கறி சோறு எப்படி முக்கியமா இருக்கனுமோ அதே அளவு ரேடியா செட்டும் இருக்கனும். அப்பதான் அது விசேஷ வீடு என்று நம்புவார்கள். அந்த அளவுக்கு கலைகள் ஒன்றிக்கிடக்கும். இந்த நிலையில் தான் உசிலம்பட்டி அருகே மூதாட்டியின் மறைவிற்கு, அவர் ஆசைப்படி ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன், அவரது 70க்கும் மேற்பட்ட பேரன் பேத்திகள் இறுதி மரியாதை செய்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
96வது வயதில் மூதாட்டி உயிரிழந்தார் - பாட்டியின் ஆசை
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்தவர் பூசாரி பரமத்தேவர் மனைவி நாகம்மாள். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் நேற்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் இந்த மூதாட்டி உயிரிழந்தார். இவருக்கு 2 மகன்கள், நான்கு மகள்கள் உள்ள சூழலில், மூன்று தலைமுறையைக் கண்ட இந்த மூதாட்டிக்கு தற்போது வரை இவரது பேரன் பேத்தியாக 78 பேர் உள்ளனர். இந்நிலையில் தனது இறப்பிற்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது
அதன்படி மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், பேரன் பேத்திகள் இணைந்து நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சி, ரேடியோ, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என கொண்டாடி இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். பெரும்பாலும் கோவில் திருவிழா, இல்ல விழாக்களில் மட்டுமே ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும் சூழலில் மூதாட்டியின் ஆசைப்படி இறப்பு வீட்டில் ஆடல் பாடல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் இறுதி மரியாதை செய்யப்பட்ட சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ரெட் லைட் ஏரியாவில் 900 தமிழ் பெண்கள்! பம்பாயை அலறவிட்ட தமிழக போலீஸ் - 90ல் நடந்தது என்ன?
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion