மேலும் அறிய

Madurai: உப்பு நீரும் நன்னீராகிறது; உசிலம்பட்டி விவசாயிகள் மகிழ்ச்சி அண்ணாச்சி

ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உப்பு நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் பெருமிததுடன் தெரிவித்து வருகின்றனர்.
 

வறட்சியை தாண்டி வெற்றிக் கொடிநாட்டும் விவசாயிகள்

 
உசிலம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு இடங்களில் போதிய நீர் இல்லாததால் வறட்சி சூழலை தான் பார்க்க முடியும். விவசாயம் பொய்த்துப் போனதால் பல இளைஞர்கள் வெளிமாநிலங்களுக்கு முறுக்கு சுத்தும், தொழிலை நம்பி வெளியேறிவிடுகின்றனர். இதையும் தாண்டி, பல விவசாயிகள் விவசாயத்தை வெற்றிகரமாக கொண்டு செலுத்துகின்றனர். ”சியான் காலத்தில் இருந்து விவசாயத்தை கைவிடாமல் செய்கிறோம்” - என உசிலம்பட்டி விவசாயிகள் சொல்வதை கேட்கும் போது மற்ற பகுதி விவசாயிகளுக்கு தெம்புகிடைக்கும். இந்நிலையில் உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்தின் பயனாக சிறு மழைக்கே 30 ஆண்டுகளுக்கு பின் கிணறுகளில் ஊற்று நீர் உருவாகி நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகியுள்ளது

 
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமாக இருந்த 58 கால்வாய் திட்ட பணிகள் நிறைவடைந்து கடந்த 5 ஆண்டுகளாக அவ்வப்போது வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்மாய் 33 கண்மாய்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதனால் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த கண்மாய்கள் மற்றும் இக் கால்வாய் செல்லும் வழியில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் ஒவ்வொரு முறை தண்ணீர் திறந்துவிடப்படும் போதும் கணிசமாக உயர துவங்கியது. இந்நிலையில் இந்த ஆண்டு தண்ணீர் திறப்பதற்கு முன்பே கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த சிறு மழைக்கே உசிலம்பட்டியின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிணறுகளிலும், கண்மாய் மற்றும் விவசாய நிலங்களிலும் ஊற்று நீர் உருவாகி ஆங்காங்கே நீர் வெளியேறி வருகிறது.
 
உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி
 
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வரை 3 முதல் 4 ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் தண்ணீர் இல்லாமல் ஆயிரம் அடிக்கு மேல் சென்ற நிலத்தடி நீர் மட்டம், 30 ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு உயர்ந்து ஆங்காங்கே ஊற்றுகளாக உருவாகியுள்ளது. இதனால் நீர் நிலைகளும் நிரம்பி வழிவதோடு, உப்பு நீராக இருந்த நீரும் நன்னீராக மாறி வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 15 நாட்களாவது உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு தண்ணீரை திறந்து விட நிரந்தர அரசாணை வழங்கி தண்ணீரை ஒவ்வொரு ஆண்டும் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
 
 
 

தலைப்பு செய்திகள்

அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
தவெக அரசின் 'மாற்றமா' இது? சட்டசபையில் அமைச்சர்கள் குழப்பம், முதல்வர் விஜய் மவுனம்! - ஆர்.பி.உதயகுமார் தாக்கு !
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
கரூர் கோவில் நிலங்கள்: பத்திரப்பதிவு தடை நீக்கம் குறித்து உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!
விருதுநகர்: பட்டாசு ஆலை, நீர்நிலை அருகே கல் குவாரி - உயர் நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
Ration Shop Time : ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
ரேஷன் கடைகளுக்கு விடுமுறை, வேலை நேரம் மாற்றம்.? ஊழியர்கள் எதிர்பார்த்த நியூஸ்-வெளியாகப்போகும் அறிவிப்பு
Embed widget