மேலும் அறிய

மதுரையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! முக்கிய சாலைகளில் ஒரு வழிப்பாதை - காரணம் என்ன?

தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக வரும் 15.10.2025 காலை முதல் மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 
மதுரை மாநகர் போக்குவரத்து மாற்றம்
 
மதுரை நகர் மற்றும் பிறமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் அருள்மிகு ஸ்ரீமீனாட்சியம்மன் கோவிலுக்கும், நகைக் கடைகளுக்கும் மற்றும் ஜவுளிக்கடைகளுக்கும் செல்ல பயன்படுத்தக்கூடிய முக்கிய சாலையாக நேதாஜி ரோடு அமைந்துள்ளது. மேலும் சாலையில் வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும் சந்திப்பாக மேலமாசிவீதி, நேதாஜி ரோடு சந்திப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் அதிக வாகன போக்குவரத்து மற்றும் அதிக பாதசாரிகளின் வருகை, பின் காரணமாக போக்குவரத்து நெருக்கடி உள்ள சந்திப்பாக இச்சந்திப்பானது மாறியுள்ளது. மேலும் இச்சந்திப்பில் பொதுமக்கள் அதிகமனோர் வந்து செல்லும் முருகன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. தற்போது திபாவளிப்பண்டிகை விழாக்காலம் என்பதால் மேலமாசிவீதி, நேதாஜி ரோடு சந்திப்பு, மற்றும் நேதாஜி ரோடு மேலும் அதிகமான வாகன போக்குவரத்து மற்றும் அதிக பாதசாரிகளின் வருகையின் காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தேக்கநிலை ஏற்படுகின்றது. இதனை தவிர்ப்பதற்கு தீபாவளி பண்டிகை வரை தற்காலிகமாக வரும் 15.10.2025 காலை முதல் கீழ்கண்ட ஒரு வழிப்பாதை போக்குவரத்து மாற்றங்கள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
 
KPS சந்திப்பிலிருந்து நேதாஜி ரோடு மற்றும் ஜம்ஜம் சந்திப்பிலிருந்து மேலவடம்போக்கி தெரு முழுவதும் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகின்றது.
 
i) அதன்படி KPS சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு வழியாக எந்த வாகனங்களும் செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் TPK ரோடு ஜம்ஜம் ஸ்வீட்ஸ் சந்திப்பில் இடது புறம் திரும்பி மேலவடம்போக்கி தெரு வழியாக DM கோர்ட் சந்திப்பிற்கு சென்று மேலமாசிவீதி செல்ல வேண்டும்.
 
ii) DM கோர்ட் சந்திப்பிலிருந்தும் கூடலழகர் பெருமாள் கோவில் சந்திப்பிலிருந்தும் எந்த ஒரு வாகனமும் மேலவடம்போக்கி தெரு வழியாக TPK ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் DM கோர்ட் சந்திப்பிலிருந்து மேலமாசி வீதி ஆரியபவன் சந்திப்பு சென்று இடதுபுறம் திரும்பி நேதாஜி ரோடு வழியாக TPK ரோடு செல்ல வேண்டும். மேலவடம்போக்கி தெருவில் எந்த ஒரு வாகனமும் தீபாவளி வரை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
 
iii) ஜான்சி ராணி பார்க் முதல் முருகன் கோவில் வரை தற்காலிகமாக ஒருவழிப்பாதையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலக்கோபுரத்தெரு, மேலஆவணிமூலவீதியிலிருந்து வரும் வாகனங்கள் நேராக நேதாஜி ரோடு முருகன் கோவில் செல்லாமல் மீனாட்சி பேருந்து நிலையம், கான்சாமேட்டுத்தெரு, DM.கோர்ட், மேலமாசிவீதி வழியாக முருகன் கோவில் சந்திப்பு செல்ல அனுமதிக்கப்படுகின்றது. மேலும் மேலமாசிவீதியிலிருந்து ஆரியபவன் சந்திப்பு வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லக்கூடிய வாகனங்கள் வழக்கம்போல் முருகன் கோவில் வழியாக ஜான்சி ராணி பார்க் செல்லாம்.
 
iv) பெருமாள் தெப்பம் சந்திப்பிலிருந்து எந்த ஒரு வாகனங்களும் நேதாஜி ரோடு செல்வதற்கு அனுமதி இல்லை. இவ்வாகனங்கள் அனைத்தும் டவுன்ஹால் ரோடு வழியாக செல்ல வேண்டும். நேதாஜி ரோட்டிலிருந்து பச்சை நாச்சியம்மன் கோவில் தெரு வழியாக பெருமாள் தெப்பத்திற்கு வாகனங்கள் செல்லலாம். பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இம்மாறுதலுக்கு ஒத்துழைப்பு வழங்க மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறை சார்பாக இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகின்றது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்பு செய்திகள்

பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
பாஜகவுடன் கள்ள கூட்டணி வைத்தால் திமுக அதல பாதாளத்திற்கு செல்லும் - எம்.எல்.ஏ., முஸ்தபா சாடல் !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
முதல்வரை சீண்டினால் விடமாட்டோம்! நயினார், உதயக்குமாருக்கு உசிலம்பட்டி எம்.எல்.ஏ., கடும் எச்சரிக்கை !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget