மேலும் அறிய

மதுரையில் தைப்பூசம்: மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நீர் மோர் பந்தல்.. அனைவரையும் கவர்ந்த நெகிழ்ச்சி!

மதுரையில் தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – சே குவேரா கிளை சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.

தைப்பூசத்தை முன்னிட்டு முதல் படை வீடான திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்.
 
தைப்பூசம்
 
பூச நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் ஒருசேர வரக்கூடிய நாளே தைப்பூசம் என்று சொல்லப்படுகிறது. அசுரனை அழிக்க தேவர்கள் சிவபெருமானிடம் வேண்டியதை அடுத்து சிவபெருமான் நெற்றியில் இருந்து வெளிவந்த தீப்பொறியில் உருவான கந்தனிடம் தாயார் சக்தி தேவி அசுரனை அழிப்பதற்காக வேல் கொடுத்தது, தைப்பூச நாள் என்பதால் இந்த நாள் தமிழர்களால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமான் ஆலயங்களிலும், முருகப்பெருமான் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வர். தமிழகம் மட்டுமல்லாது சிங்கப்பூர் மலேசியா என உலகெங்கிலும் உள்ள முருகனின் திருக்கோவில்களில் தைப்பூசத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் இந்த நாளில் முருகன் கையில் உள்ள வேலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுவது வழக்கம். தைப்பூசத் திருநாள் பழனியில் தான் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் என்றாலும், முருகனின் அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருநாள்  வெகுவிமர்சையாக கொண்டாடப்படும்.
 
திருப்பரங்குன்றம் சாமி தரிசனம்
 
அதன் ஒரு பகுதியாக ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதுரை, திருமங்கலம், உசிலம்பட்டி, சோழவந்தான், மேலூர் மட்டுமின்றி சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கட்டண தரிசனத்தில் வருபவர்கள் கோவிலுக்கு இடப்புறமாகவும் இலவச தரிசனத்தில் செல்பவர்கள் கோவிலுக்கு வளப்புறமாகவும் கிரிவலப் பாதை நெடுக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அமைதரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கூடுதல் பாதுகாப்பிற்காக 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் திருப்பரங்குன்றம் கோவிலின் உப கோவில் ஆன காசி விஸ்வநாதர் கோவில் செல்லும் வழியில் உள்ள கோட்டைதெரு பழனி ஆண்டவர் சந்நிதியில் பழனியாண்டவருக்கு காலை 10 மணிக்கு பால், பன்னீர், தேன், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிருதம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நீர்மோர் வழங்கப்பட்டது
 
மதுரை : தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை மாநகர இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் – சே குவேரா கிளை சார்பாக மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் நீர்–மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பகுதி குழு துணைச் செயலாளர் பாலசிங்கம் தலைமையிலும், கிளைச் செயலாளர் சிவரஞ்சனி, பகுதி குழு செயலாளர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஷ், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு பங்கேற்பாளர்களாக மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் வேல் தேவா, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் கௌதம் பாரதி கலந்து கொண்டனர். மேலும் மதுரை பல் சமய உரையாடல் குழு சார்பில் அருட்பணி பெனடிக்ட் பர்னபாஸ், பால் பிரிட்டோ, ஜேம்ஸ் பால்ராஜ், இன்னாசி அற்புதராஜ், சந்தியாகு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அத்துடன் அப்துல்லா, போனி ஃபேஸ் (தமிழ்நாடு சிறுபான்மை நல குழு – மாநில குழு உறுப்பினர்) ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்ட இந்நிகழ்வு, மத நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை வலியுறுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.
 

தலைப்பு செய்திகள்

விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை 744: நில இழப்பீடு பெறாதோருக்கு, இது தான் சூப்பர் வாய்ப்பு !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
வட நாட்டில் எங்கு சென்றாலும் விஜய், தளபதி என்று தான் பேசிக்கொண்டுள்ளார்கள் - இந்திய ஹஜ் சங்கத்தலைவர் பேட்டி !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
மெய்யழகனுக்கு விருதுகள் இல்லை... ஆனால் மக்கள் மனதில் வெற்றி - மதுரை போஸ்டரால் பரபரப்பு !
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Embed widget