மேலும் அறிய

மதுரை சிங்கப்பெண் படையின் அதிரடி: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆட்டோ ஓட்டுநர்கள் கைது!

மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படையினரின் முதல் நடவடிக்கைக்கு காவல் ஆணையர் பாராட்டு - குற்றவாளியின் குற்றத்தை மறைக்க உதவிய நபரும் கைது.

மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படையினரின் முதல் அதிரடி நடவடிக்கை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - இரு ஆட்டோ ஓட்டுனர்கள் கைது.

சிங்கபெண் சிறப்பு படையினருக்கு கிடைத்த தகவல்

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியில் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு பள்ளி  மாணவிக்கு அவ்வழியாக வந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மதுரை மாநகர சிங்கபெண் சிறப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் சிறப்பு படை பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவியிடம் தனியாக ரகசியமாக அழைத்து விபரங்களை கேட்டறிந்தனர்.

மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்த பின்னர் தந்தை அளித்த புகாரின் பேரில் மதுரை மாநகர தெற்கு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சிங்கப்பெண் சிறப்பு படையினர் உதவியுடன் அனைத்து மகளிர் காவல்துறையினர் குற்றம் நடைபெற்ற இடம் மற்றும் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் தீவிர விசாரணையை நடத்தினர். அதனடிப்படையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த மதுரை மாவட்டம் பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனரான  முகமது இப்ராஹிம்( 65 ) மற்றும் காவல்துறை விசாரணையின் போது உண்மையை மறைத்து எதிரிக்கு உதவியாக இருந்த மதுரை ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுநரான அப்பாஸ் ( 55 )  ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் இருவரையும் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்ட நிலையில் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கிய இரண்டே நாட்களில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்களை சிங்கப்பெண் சிறப்புபடை காவலர்களான பெண் உதவி ஆய்வாளர் தனபாக்கியலட்சுமி, பெண் தலைமை காவலர்கள் தேன்மொழி மற்றும் தமிழரசி ஆகியோர் விரைந்து செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவியை விசாரணை செய்து உடனடியாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் அளித்தும் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்ட ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களை கைது செய்ய உதவியாக இருந்த பணியை பாராட்டி மாநகர காவல் ஆணையர் கபில்குமார் சரத்கர் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மதுரை மாநகரில் சிங்கப்பெண் சிறப்பு படை தொடங்கிய முதல் அதிரடி நடவடிக்கையால் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்ட செயல் மதுரை மாநகர பெண்கள் மத்தியில் பாராட்டுதலை பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
மதுரை ரயில்நிலையம் நவீன வசதிகளுடன் ரூபாய் 413 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் விறுவிறு !
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
வைகை எக்ஸ்பிரஸ் 49வது பிறந்தநாள்: சுதந்திர தினத்தில் மதுரை ரயில் நிலையத்தில் கோலாகல கொண்டாட்டம்!
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரஜினி முருகன் திரைப்பட பாணியில் மிரட்டல்.. மாநகராட்சி பணிகள் முடங்குவதாக ஒப்பந்தக்காரர்கள் வேதனை !
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget