மேலும் அறிய
மதுரை மக்களே லிஸ்டில் உங்க ஊர் பெயர் இருக்கா... நாளைய மின்தடை அறிவிப்பு வெளியானது !
Madurai Power Shutdown: மதுரையில் நாளை (16.07.2025) மின்சார பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் பல்வேறு பகுதியில் மின் தடை செய்யப்படவுள்ளது.

மின்தடை
Source : whats app
Madurai Power Shutdown: மதுரையில் பல்வேறு பகுதிகளில் நாளை (16.07.2025) மின்சார வழித்தடங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது
திருமங்கலம் செயற்பொறியாளர் அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியம் 110/33-11 கே.வி தே.கல்லுப்பட்டி துணை மின் நிலையம், 33/11கே.வி T.குன்னத்தூர் மற்றும் 33/11 கே.வி கள்ளிக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (16.07.2025) ஏற்பட இருக்கும் மின் தடை பற்றி திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு செய்தி வெளியிட்டுள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்
தே.கல்லுப்பட்டி நகரை சுற்றிய பகுதி முழுவதும், ராம்நகர், ராமுணிநகர்,பாலாஜிநகர், கெஞ்சம்பட்டி, காரைக்கேணி, வன்னிவேலம்பட்டி, தே. குண்ணத்தூர், கிளாங்குளம், தம்பிபட்டி, கொண்டுரெட்டிபட்டி, ஆண்டிபட்டி, காடனேரி, எம்.சுப்பலாபுரம், வில்லூர், புளியம்பட்டி, வையூர், சென்னம்பட்டி, சின்னரெட்டிப்பட்டி, பெரியபூலாம்பட்டி, ஆவடையாபுரம், மத்தக்கரை, குருவநாயக்கன்பட்டி, கள்ளிக்குடி, குராயூர், M.புளியங்குளம், சென்னம்பட்டி, மையிட்டான்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, தென்னமநல்லூர், சித்தூர், ஆவல்சூரம்பட்டி, திருமால், சிவரக்கோட்டை, பாரமவுண்ட் மில் ஏரியா, ராஜாராம் பவுடர் கம்பெனி, அலுமினியம் மெட்டல் பவுடர் கம்பெனி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















