மேலும் அறிய
Advertisement
Shocking Video : மதுரையில் கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபர்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!
மதுரையில் கோயிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபரின் அதிர்ச்சியான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த 29-ம் தேதி ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூல் தயாரிக்கப்பட்டது.
#madurai | மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென மயக்கம் ஏற்பட்டு பாத்திரத்தில் விழுந்து உயிரிழந்த நபரின் அதிர்ச்சியான சி.சி.டி.வி., காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— Arunchinna (@iamarunchinna) August 2, 2022
Further reports to follow - @abpnadu
| #madurai | | #spritual | @jp_muthumadurai | ....> pic.twitter.com/csILcaq0kT
அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் (எ) முருகன் என்ற இளைஞருக்கு எதிர்பாராதவிதமாக மயக்கம் ( தலைசுற்றல்) ஏற்பட்டபோது கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.
அப்போது அதீத வெப்பத்துடன் இருந்த கூழானது முருகனின் உடல் முழுவதும் கொட்டியதால் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அன்றே உயிரிழந்தார்.
மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: ஐ.டி. ரெய்டில் சிக்கிய சினிமா ஃபைனான்சியர் அன்புசெழியன்: எங்கெல்லாம் சோதனை !
இந்நிலையில் உயிரிழந்த முருகன் கூழ் பாத்திரத்தில் உள்ளே விழும் அதிர்ச்சிகரமான சி.சி.டி.வி., காட்சி வெளியாகியுள்ளது. கூழ் பாத்தித்தில் விழுந்த முருகனை அங்கு கூடியிருந்தவர்கள் மீட்க முயற்சி செய்தும் சூடான கூழ் என்பதால் அவரை உடனடியாக மீட்க இயலாத நிலை ஏற்படுவது போன்ற காட்சிகள் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்., ”மயக்கம் ஏற்பட்டு முருகன் கூழில் விழுந்த சம்பவம் எங்கள் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த சிசிடிவி காட்சி வெளியானது கண்கலங்க வைக்கிறது” என்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion