மதுரையில் வைகை ஆற்றில் வெளிப்படையாக கலக்கப்படும் கழிவுகளால் நிறம் மாறிய தண்ணீர் - பொதுமக்கள் அச்சம்
வைகை ஆற்றில் வெளிப்படையாக கலக்கப்படும் கழிவுகளால் நிறம் மாறிய வைகை நீர் - பொதுமக்கள் அச்சம். சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள கோரிக்கை.

மதுரை மாநகர் வைகை ஆற்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது நீர் வரத்து இருப்பதால் ஆற்றில் நீர் தற்போதும் இருந்து வருகிறது. இந்த நிலையில் வைகைஆற்றில் கழிவுநீர் மற்றும் குப்பைகளை கலப்பதை தடுப்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இரண்டு புறங்களிலும் உயரமான தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதனை மீறியும் மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் வைகை ஆற்று கரையோரங்களில் இருந்து கழிவுநீர் ஆற்று நீரில் கலந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுவருகிறது.
மதுரை வைத்தியநாதபுரம் ESI hospital ரோட்டில் உள்ள NTC மருத்துவமனை திரவ கழிவுகள் மதுரை மாநகராட்சியே பைப் லைன் வைத்து மருத்துவ திரவக்கழிவுகள் கலக்கிறது. கழிவுநீர் மிகவும் மஞ்சளாக பயங்கர தூர்நாற்றத்துடன் கலக்கிறது. என வைகை நதி பாதுகாப்பு இயக்கம் @JeeVaigai வேதனை தெரிவித்தார். pic.twitter.com/w0Qttbcs7N
— arunchinna (@arunreporter92) February 8, 2023

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்