மேலும் அறிய

மதுரையில் அனுமதியின்றி வழியை மறித்து போராட்டம்; ஆர்.பி.உதயகுமார் மீது வழக்குப் பதிவு

தர்ணா போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் 56 அதிமுகவினர் மீது அனுமதியின்றி கூடியது, வழியை மறித்து போராட்டம் நடத்தியது ஆகிய இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வைகை அணையில் இருந்து திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர் மற்றும் 58 கிராமபாசன கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினார்.
 
அதிமுக முன்னாள் அமைச்சர் உட்பட 56 பேர் குண்டு கட்டாக கைது
 
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் பெரியாறு வைகை பாசன திட்டத்தின் கீழ் திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வைகை அணையில் 6000 மில்லியன் கன அடி தண்ணீர் இருக்கும்போது திருமங்கலம் பகுதிகளுக்கு செப்டம்பர் 15 முதல் தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்று. மதுரை மாவட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரையான இருபோக பாசனத்திற்கு 45 ஆயிரம் ஏக்கர் மற்றும் மேலூர் ஒரு போக பாசனத்திற்கு 85 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருமங்கலம் ஒருபோக பாசனத்திற்கு 19,500 ஏக்கர் மரத்திற்கு தண்ணீர் திறக்க மூன்று பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 

மதுரையில் அனுமதியின்றி வழியை மறித்து போராட்டம்; ஆர்.பி.உதயகுமார் மீது வழக்குப் பதிவு
 
தற்போது கள்ளந்திரி பகுதியில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருமங்கலம் பிரதான கால்வாய் மேலூர் மற்றும் 58 கிராம பாசன கால்வாய்-க்கு உடனடியாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 56 நபர்கள்  திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மழை பெய்யும் போது போராட்டத்தை கைவிடாமல் கொட்டும் மழையிலும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஐந்துக்கும் மேற்பட்ட முறை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி மனு கொடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை எனவும் ஆளும் திமுக அரசு தண்ணீரில் அரசியல் செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உட்பட 56 நபர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். இதனால் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் அனுமதியின்றி வழியை மறித்து போராட்டம்; ஆர்.பி.உதயகுமார் மீது வழக்குப் பதிவு
 
 
இந்நிலையில் பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடத்திய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் 56 அதிமுகவினர் மீது அனுமதியின்றி கூடியது, வழியை மறித்து போராட்டம் நடத்தியது ஆகிய இரு பிரிவுகளில் தல்லாகுளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget