மேலும் அறிய
வைகை வடகரையில் கடும் போக்குவரத்து நெரிசல் - மழை நீரை அப்புறப்படுத்தும் பணி !
தண்ணீர் தடுக்கும் வழியில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

தேங்கிய மழை நீர்
பருவமழை தொடங்கிய நிலையிலே மதுரை மாநகர் மற்றும் மாவட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் மதுரை வைகை ஆற்றங்கரை ஓரம் கோரிப்பாளையம் பகுதியில் இருந்து செல்லூர் நோக்கி செல்லும் வைகை வடகரை சாலை பகுதியில் மழைநீர் தேங்கியதால் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோரிப்பாளையம் பகுதியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் மற்றும் கல்பாலம் சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய வாகனங்கள் என இரண்டு புறங்களிலும் வாகனங்கள் அதிக அளவு வந்து செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
#வைகை வடகரையில் கடும் போக்குவரத்து நெரிசல் - மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
— arunchinna (@arunreporter92) November 3, 2022
Further reports to follow - @abpnadu @UpdatesMadurai @arunreporter92 #madurai @LPRABHAKARANPR3 @JHopper21 @selvantamilmani | @dhiviya_Barathi pic.twitter.com/wtEJuZTsRK
குறிப்பாக பணிக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆட்டோவில் குழுவாக செல்லும் நபர்கள், நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் உட்பட அனைவரும் குளம் போல தேங்கி இருக்கும் அந்த தண்ணீரில் மிதந்தவாறு மிகுந்த, சிரமத்திற்கு உள்ளாகி செல்கின்றனர். மறுபுறம் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் டீசல் பம்ப் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

ஒரு நாள் மழைக்கே தண்ணீர் இவ்வாறு தேங்குவதை தடுக்கும் வண்ணம் மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து வரக்கூடிய பருவ கால மழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்னெச்சரிக்கையோடு செயல்படவேண்டும் எனவும், தண்ணீர் தடுக்கும் வழியில் முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தேனி : லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர் மூலம் மொத்தம் 135 மெகாவாட் மின்உற்பத்தி
மேலும் செய்திகள் படிக்க - Rain : மதுரையில் வெளுக்கத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை..! பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்தது..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















