மேலும் அறிய
Advertisement
கடந்த ஆட்சியின் நடைமுறைகளால் ரயில்வே திட்டப்பணிகள் தாமதம் - முதல்வருக்கு மதுரை எம்.பி கடிதம்
”முந்தைய ஆட்சிக்காலத்தில் சோதனை கூடங்கள் நிர்ணயிக்கப்படாததாலும், நீதிமன்ற கருத்துக்கள் குறித்து உத்தரவுகள் வழங்கப்படாததாலும் இரயில்வே திட்ட பணிகள் தாமதம்’’
தமிழகத்தில் நிலுவையில் இருந்து வரும் ரயில்வே திட்டங்களை விரைந்து முடிப்பது தொடர்பாகவும், ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதில் கடந்த ஆட்சியில் நடந்த தவறான வழிமுறைகளை களைய வேண்டியும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மக்களவை உறுப்பினரும் ரயில்வே அலோசனை குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் கடிதம் எழுதி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
முந்தைய ஆட்சிக்காலத்தில் சோதனைக்கூடங்கள் நிர்ணயிக்கப்படாததாலும், நீதிமன்ற கருத்துக்கள் குறித்து உத்தரவுகள் வழங்கப்படாததாலும் இரயில்வே திட்ட வளர்ச்சிப் பணிகள் தாமதமாகின்றன.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) September 21, 2021
இது குறித்து தமிழக முதல்வரின் @CMOTamilnadu கவனத்திற்கு கொண்டு செல்ல கடிதம் எழுதியுள்ளேன். #Railway #TN pic.twitter.com/HcJXEe5Ico
ரயில்வே துறையின் ஆலோசனைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தமிழகத்தின் ரயில்வே வளர்ச்சித்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றுவதில் உள்ள சிக்கல்களை ஆராய்ந்த போது தங்களின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டிய முக்கிய பிரச்னையை ரயில்வே அதிகாரிகள் என்னிடம் சுட்டிகாட்டினார்கள். அதனை உங்களின் பார்வைக்கு கொண்டுவருகிறேன்.
மதுரை -தூத்துக்குடி, மணியாச்சி- நாகர்கோயில் ஆகிய இரு முக்கிய ரயில் வளர்ச்சித் திட்டங்களான இரட்டை பாதை திட்டங்களும், மதுரை-போடிநாயக்கனூர் மற்றும் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகலப்பாதை திட்டங்களும், பேரளம்-காரைக்கால் புதிய பாதை திட்டமும் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் முடிய வேண்டியவையாகும். ஆனால் மாவட்ட ஆட்சியர்கள் இந்த திட்டங்களை செயல்படுத்த மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்காததால் தாமதமாகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுபடி மண் அள்ளுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். மாவட்ட ஆட்சியர் அந்த மண்ணை ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து அந்த மண்ணில் தாது பொருள்கள் இல்லை என்று உறுதிப்படுத்தி கொண்டு அனுமதி வழங்க வேண்டும் என்பது உயர்நீதிமன்ற உத்தரவு.
மேலும் மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்த செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரையின் 5 முக்கிய கோரிக்கை ஏற்றது தென்னக ரயில்வே - சு.வெங்கடேசன் நன்றி !
ஆனால் முந்தைய அதிமுக அரசு இதற்கான சோதனை கூடங்களை நிர்ணயிக்காததாலும், உயர்நீதிமன்றத்தின் மற்ற கருத்துக்கள் குறித்தும் ஒரு உத்தரவு வழங்காததாலும் மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி வழங்கவில்லை. கடந்த ஆட்சிக்காலத்தில் உருவான இந்த தடைகளால் முக்கியமான அடித்தள கட்டுமான ரயில் வளர்ச்சி பணிகள் முடிவடைவது தாமதமாகிறது. எனவே தாங்கள் தலையிட்டு, தமிழ்நாடு அரசு பரிசோதனை கூடங்களை நிர்ணயம் செய்யவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுமதி வழங்குவது குறித்த வரையறைகளை உத்தரவிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணவேண்டாம் பாஸ் - ”ஒரு விழிப்புணர்வுதான்” - பூக்கடைக்காரர் மோகன்: மதுரையில் மணக்கும் மல்லிகைப்பூ மாஸ்க் !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion