மேலும் அறிய
மதுரை பைக் ஷோரூமில் பயங்கர தீவிபத்து: மின் கசிவால் லட்சக்கணக்கான வாகனங்கள் நாசம்!
மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீ விபத்து
Source : whatsapp
மதுரையில் பைக் ஷோரூமில் தீவிபத்து - பல லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதம்.
தனியாருக்கு சொந்தமான உள்ள பைக் ஷோரூம்
மதுரை கே.கே. நகர் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான உள்ள பைக் ஷோரூம் உள்ளது. இங்கு நேற்று இரவு வேலை முடித்து விட்டு பணியாளர்கள் வீட்டுக்கு சென்றனர். இதற்கிடையே அந்த ஷோரூமில் திடீரென தீப்பிடித்தது. இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்து விட்டு பைக் ஷோரூமில் எறிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே ஷோரூமில் இருந்த வாகனங்களிலும் தீ அடுத்தடுத்து பரவியது இதில் அங்கு இருந்த பல வாகனங்களும் தீயில் கருகி நாசமாகின. இந்த தீ விபத்து தொடர்பாக அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம்
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் நேற்று காலையில் 15 பேட்டரி இருசக்கர வாகனங்கள் ஷோரூமுக்கு வந்துள்ளது. அதில் ஏதாவது மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















