மேலும் அறிய

விஜய் ரசிகர்கள், தவெக ஆதரவாளர்களாக மாறும்போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும் - கார்த்தி சிதம்பரம்

விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது. அவருடைய ரசிகர்கள் எல்லா கட்சியிலும் உள்ளார்கள். அவர்கள் ஆதரவாளர்களாக மாறும் போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும் - கார்த்தி ப சிதம்பரம் பேட்டி.

ப.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பு
 
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 80 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை செல்லூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,..."
 
விஜய் அரசியல் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு
 
விஜய்க்கு ஆதரவு இருப்பதை  நான் ஏற்றுக்கொள்கிறேன். யார் கட்சி தொடங்கினாலும் அரசாங்கத்தை எதிர்த்து பேசுவது இயல்பு. தமிழக வெற்றிக் கழகத்திற்கு"எனர்ஜி" ஆதரவு இருப்பதை ஏற்றுக்கொள்கிறேன், அது ஒரு வடிவம் பெற்று உரு மாறி வாக்குகளை பெறுவார்களா? என்பதை நான் இப்போது சொல்ல முடியாது. எந்த ஒரு அரசாங்கமாக இருந்தாலும் நிறை குறைகள் இருக்கத்தான் செய்யும். சீர்தூக்கி பார்க்கும் பொழுது திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றி உள்ளதால் பெரிதாக குறை சொல்லி விட முடியாது. மகளிர் உரிமைத் தொகை பெரும்பாலான பெண்களுக்கு சென்று சேர்கிறது. சில பேருக்கு சேராமல் இருப்பது நிர்வாக காரணங்களால் இருந்தாலும் அந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளது 
 
திமுக vs அதிமுக என்கிற களம் 2026 தேர்தலில் மாறுகிறதா? என்ற கேள்விக்கு
 
அதிமுக ஒரு INDEPENDENT கட்சியாக இல்லாமல் பாஜக வுக்கு SUBSIDIARY ஆக இருப்பதால்தான் முன்பெல்லாம் அதிமுகவில் ஆளுமை மிக்க தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது மாறுபட்ட தலைமை உள்ளது. கட்சியில் குழப்பம் நீடிக்கின்றது, ஒற்றுமையாக இல்லை, ஒரு பஞ்சாயத்து வந்தால் டெல்லி சென்று வருகிறார்கள். அதிமுக பெரிய கட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கட்சியில் குழப்பம் ஏற்பட்டால் டெல்லி செல்வது அவர்களுடைய மைனஸாக உள்ளது. அதை விட மிகப்பெரிய மைனஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது. தமிழ்நாட்டில் ஒரு நியதி உள்ளது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அது விளங்காது. அதனால் ஒரு வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த வெற்றிடத்தை மற்ற கட்சிகளும் நிரப்ப வாய்ப்பு உள்ளது.
 
விஜய் வருகையால் திமுக கூட்டணி கட்சிகளின் வாக்கு வகைகள் பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு
 
விஜய்க்கு என்று தனி ஆதரவு உள்ளது. அவருடைய ரசிகர்கள் எல்லா கட்சியிலும் உள்ளார்கள். அவர்கள் ஆதரவாளர்களாக மாறும்போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும். 2026 தேர்தலில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும். திமுக கூட்டணி ஒற்றுமையாக உள்ளது. சிறுபான்மை வாக்குகளை பெறுவதற்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது.
 
இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் கை கொடுக்காதது குறித்த கேள்விக்கு
 
விளையாட்டையும், அரசியலையும் ஒன்று சேர்க்கக்கூடாது. இந்தியா, பாகிஸ்தான் ராஜாங்க உறவு ஒன்றும் முறியவில்லை. இந்தியா, பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் இருந்தால் அதை விளையாட்டில் கலக்கக்கூடாது. இந்திய-பாகிஸ்தான் போட்டி ஆசிய கோப்பை விளையாட்டு போட்டியில் பங்கேற்க ஒப்புக்கொண்ட பிறகு இதுபோல செய்யக்கூடாது, இந்தியா கிரிக்கெட் போட்டி என்பதால் கவனம் பெறுகிறது. இதுவே டென்னிஸ், டேபிள் டென்னிஸ் போன்ற விளையாடத்தான் செய்கிறார்கள். அரசியலையும் விளையாட்டையும் கலக்கக் கூடாது.
 
பிரதமர் மோடி நான் சிவபக்தர் என்று கூறிய கருத்துக்கு
 
நானும் தான் ஒரு சிவ பக்தர். தமிழ்நாட்டில் முருகனையும் விநாயகரின் வழிபடுபவர்கள் 75 சதவீதம் பேர் சிவ பக்தர்கள் தான்.
 
கூட்டணி ஆட்சி அமைந்தால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு
 
1967 ஆம் ஆண்டு முதல் ஏக்கம் உள்ளது. அதே ஏக்கம் தான் எதிர்காலத்திலும் இருக்கும். 2006 ஆம் ஆண்டு வாய்ப்பு வந்த போது நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பு மறுபடியும் வந்தால் காங்கிரஸ் நிச்சயம் அதை பயன்படுத்திக்கொள்ளும் என்றார்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
போடு.. 1.76 லட்சம் ரூபாய் ஆஃபர்.. Honda Elevate கார் வாங்க ரெடியா?
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
Embed widget