மேலும் அறிய

காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும் - அண்ணாமலை எச்சரிக்கை

இந்தி மொழியை திணிக்கக்கூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம்  - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

மதுரை பா.ஜ.க., மாநகர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற கணபதி ஹோமம் மற்றும் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவத்தையும் வழங்கும் நிகழ்ச்சியில் பா.ஜ.க., மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, “இந்தி திணிப்பு நடைபெறுவதாக கூறும் அமைச்சர் பொன்முடி சுய பரிசோதனை செய்ய வேண்டும். 2019ஆம் ஆண்டு வரை இந்தி 3-வது மொழியாக தான் இருந்தது, 2019ல் தான் தேசிய கல்விகொள்கையில் 3-வது மொழி என்பது தேர்வாகவுள்ளது, இந்தி மொழியை திணிக்ககூடாது என்பது தான் பிரதமரின் விருப்பம்.

தமிழகத்தில் பா.ஜ.கவின் புதிய கல்விகொள்கை மாற்று பெயர்களில் இல்லம் தேடி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. பொறியியல் படிப்பில் லட்சத்தில் 69 பேர் தான் தமிழில் பயின்று வருகின்றனர். பாஜக அரசில் தான் இந்தி மொழி திணிப்பு இல்லை. கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 24ஆம் தேதி நான் மனிதவெடி குண்டு தாக்குதல் என்றேன். குண்டுவெடித்து 54 மணி நேரம் கழித்து தான் பயங்கரவாத தாக்குதல் என கூறுகிறார்கள். ஆர்.எஸ்.பாரதி பாஜகவிற்கு நன்றி சொல்ல வேண்டும், பாஜக தான் வெடிகுண்டு சம்பவத்தை வெளிக்கொண்டுவந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை மறைத்தது தி.மு.க தான், பாஜக வெளிப்படுத்தாவிட்டால் சிலிண்டர்  குண்டுவெடிப்பில் இறந்த முபின் குடும்பத்திற்கு அரசு வேலையே திமுக அரசு கொடுத்திருக்கும். ஆர்.எஸ்.பாரதி அரசியலுக்காக பேசிவருகிறார்.  மதுரையில் மகளிர் கல்லூரி முன்பாக நடைபெற்ற சம்பவம் பதைபதைக்க வைக்கிறது பள்ளி குழந்தைகள் பீர் பாட்டில்களை எடுத்துசெல்லும் நிலை தான் உள்ளது.
 
காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்  - அண்ணாமலை எச்சரிக்கை
 
கட்டுக்கோப்பாக இருந்த தமிழகம் மதுவாலும், கஞ்சாவாலும் சீரழிந்துள்ளது, காவல்துறையின் கையை கட்டிப்போடப்பட்டுள்ளது தமிழகத்தில் விபரீதத்தை ஏற்படுத்தும், மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுவது புதிது. காவல்துறையினர் கையில் உள்ள லத்தி என்பது பூஜை செய்வதற்காக காவல்நிலையங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துக்களை தடுக்க வேண்டும். காவல்துறையினர் லத்தியை பயன்படுத்த வேண்டும். அப்போது தான் கஞ்சா குடிப்பவர்கள், வழிப்பறி , பெண்களை இழிவுபடுத்துபவர்களை கட்டுப்படுத்த முடியும். சாத்தான்குளம், தூத்துக்குடி போன்ற காவல்துறையினரின் நிகழ்வுகள் தவறு, மேலாதிகாரிகளின் தோல்வி தான் அது. ஆய்வாளர்களை நியமிக்க எம்.எல்.ஏ., லெட்டர் வேண்டும் என்ற நிலை தான் உள்ளது. எனவே மக்களை விட எம்எல்ஏக்கு தான் விஸ்வாசமாக இருப்பார். பிரதமர் மோடி 11ஆம் தேதி மதியம் 1.50க்கு மதுரை விமான நிலையம் வருகிறார், 2.20மணிக்கு திண்டுக்கல் காந்திகிராமுக்கு செல்கிறார். அங்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும், தமிழகம் 5 ஆண்டுகளில் தமிழகம் எங்கே செல்லும் என்ற அச்சம் பொதுமக்களுக்கு உள்ளது. குஜராத் தேர்தல் முடிவு என்பது சரித்திரத்தில் ஏற்கனவே இருந்ததை விட ஒரு சீட் கூடுதலாக பெற்று பாஜக வெற்றிபெறும், தமிழர்கள் உள்ள பகுதிகளுக்கு சென்று பிரச்சாரம் செய்வோம்.

காவல்துறையினரின் கையை கட்டிப்போட்டால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்  - அண்ணாமலை எச்சரிக்கை
 
குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகியவற்றில் பாஜக இமாலய வெற்றிபெறும்.  அங்கு 2ஆவது இடத்திற்கு காங்கிரஸா? ஆம் ஆத்மியா என்பது தான் போட்டியாக இருக்கும். ஜனநாயகத்தில் போராட்டம் மட்டுமே தீர்வு. பால்விலை உயர்வை கண்டித்து பால் உற்பத்தியாளர்களை இணைத்து பாஜக சார்பில் போராட்டம் என்பது 1204 இடங்களில் நடைபெறுகிறது. சென்னைக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டங்களை செயல்படுத்துவது தான் அரசின் வேலை,  அமைச்சர்கள், மேயர் ரோலக்ஸ் விளையாட்டு போல மாற்றி மாற்றி பேசுகின்றனர். மத்திய அரசின் பணத்தை முறையாக பயன்படுத்தவில்லை. பெரிய அளவிலான மழை பெய்யாத நிலையில் சென்னை தடுமாறுகிறது. திருப்புகழ் ஐ.எ.ஏஸ் மோடியின் அன்பை பெற்றவர் , மோடியிடம் பாடம் கற்றவர் அவரது தலைமையில் தமிழக அரசு குழு அமைத்துள்ளனர். அதனால் சிறப்பாக பணியாற்றுவார், தமிழக அமைச்சர்கள் குறுக்கும் நெடுக்கும் நடந்து ஒழப்பாமல் இருந்தால் சரிதான்” என்றார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
Kalki Movie Leaks : பிட்டு பிட்டாக படத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்! கலக்கத்தில் கல்கி படக்குழு!
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
School Holiday: தொடர் கனமழை எதிரொலி - நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Vodafone Recharge: நாங்கனா சும்மாவா..! வோடாஃபோன் நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
T20 WC Final: டி20 உலகக் கோப்பை ஃபைனல்! இந்தியா - தென்னாப்ரிக்கா இன்று பலப்பரீட்சை - சரித்திரம் படைப்பாரா ரோகித்?
Breaking News LIVE: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு
Breaking News LIVE: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து; 3 பேர் உயிரிழப்பு
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
IIT Madras Recruitment: பொறியியல் தேர்ச்சி பெற்றவரா? ரூ.30 ஆயிரம் ஊதியம் - ஐ.ஐ.டி.யில் வேலை!
Embed widget