மேலும் அறிய

மதுரை 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!

மதுரை மாவட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு குறைதீர் கூட்டம்: 262 மனுக்கள் பெறப்பட்டு, மாணவர்களுக்கு உடனடி உயர்கல்வி சேர்க்கை ஏற்பாடு!

மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்த சிறப்பு குறைதீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ், மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கான ஆணைகளை வழங்கினார்.

100 சதவீத உயர்கல்விச் சேர்க்கை
 
மதுரை மாவட்டத்தில் 100 சதவீத உயர்கல்விச் சேர்க்கை விகிதத்தை உறுதி செய்யும் நோக்கில், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றும் உயர்கல்வியில் சேராதவர்கள், தேர்வில் தோல்வியுற்றவர்கள், தேர்வு எழுதாதவர்கள் மற்றும் பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வி அமைப்புடன் இணைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உயர்கல்வி தொடர்பான ஆலோசனை, சேர்க்கை மற்றும் கல்வி உதவி சார்ந்த குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் இச்சிறப்பு குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டது.
 
  மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டன
 
இக்கூட்டத்தில் உயர்கல்வி சேர்க்கை, கல்வி உதவித்தொகை, கல்விக் கடன், தொழிற்கல்வி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 262 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்களில் கல்விக் கடன் கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் பிற கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், பன்னிரண்டாம் வகுப்பு முடித்தும் இதுவரை உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு உடனடியாக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு, உயர்கல்வியில் சேர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி, 23 மாணவர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உடனடிச் சேர்க்கையும் (Spot Admission), 27 மாணவர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் (ITI) மற்றும் டிப்ளமோ படிப்புகளில் உடனடிச் சேர்க்கைக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
 
மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த 60 மாணவ, மாணவிகள் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பல்வேறு உயர்கல்விப் படிப்புகளில் சேர்ந்து பயில விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல், விண்ணப்பப் பதிவு மற்றும் சேர்க்கை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிகழ்வின் மூலம் உயர்கல்வியில் சேர்வதற்கான வாய்ப்பைத் தவறவிட்ட மாணவர்கள் மீண்டும் கல்வி வாய்ப்புடன் இணைக்கப்பட்டதுடன், பொருளாதார மற்றும் நிர்வாகக் காரணங்களால் உயர்கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைந்த உதவிகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.தயாளன் அவர்கள், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலர்கள், முன்னோடி வங்கி அலுவலர்கள், பல்வேறு தனியார் கல்லூரிகளின் பிரதிநிதிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ITI) மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அலுவலர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
மலை போல் லஞ்ச வழக்குகள்: தமிழகத்தில் 2,423 வழக்குகள் நிலுவை.. சிறப்பு நீதிமன்றங்கள் எப்போது?
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனிகோயில் பத்திரப்பதிவு விவகாரம்... வழக்கறிஞர் அன்வர்தீன் மரணம்: சிறையில் நடந்தது என்ன? நீதிபதி விசாரணை!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
பழனி அருகே நெய்க்காரபட்டி ஆடி திருவிழா: தலையில் தேங்காய் உடைக்கும் வினோத நேர்த்திக்கடன்!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
தாமதத்திற்குப் பின் கம்பம் பள்ளத்தாக்குக்கு முல்லைப் பெரியாறு அணை திறப்பு: விவசாயிகள் நிம்மதி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Embed widget