அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை
குரங்கனி மலைக்கு டிரெக்கிங் அழைத்து சென்ற பெல்ஜியம் நாட்டின் பீட்டர் வான் கெய்ட் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
அறநிலையத்துறை அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை
மதுரையை சேர்ந்த சுதர்சனம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, சட்டம் 1959 - இன் படி செயல்பட்டு வருகிறது. சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மதம் சார்ந்த துறை சார்பாக இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு, அதற்கான அறிவிப்பாணை 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை ஆணையரால் வெளியிட்டப்பட்டது. இந்த புதிய விதியில், "3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வெளித்துறை பணியாளர்கள், செயல் அலுவலர் நிலையில் உள்ள மற்றொரு அறநிலையத்திற்கு மாறுதல் செய்யப்படுவார்.
ஒவ்வொரு ஆண்டும் ஒரே அறநிலையத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களின் பட்டியல் ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த பட்டியலில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்களை சுழற்சி முறையில், ஒவ்வொரு ஆண்டும் மற்ற அறநிலையத்திற்கு பணிமாறுதல் செய்ய வேண்டும்.
பழைய விதிகளே போதுமானதாக உள்ள நிலையில், புதிய விதிகள் சட்டத்திற்கு புறம்பானது. ஆகவே, "இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் தொடர்பான அரசாணை மற்றும் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதிப்பதோடு, அவற்றை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, இந்து சமய நிறுவன அலுவலர்களுக்கான விதிகள் குறித்த அரசாணை மற்றும் அறிவிப்பாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு குறித்து சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் செயலர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.