மேலும் அறிய

குழந்தைகள் தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த துர்கா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  தனது இரண்டு மைனர் குழந்தைகளை மீட்டு தன்னிடம் ஒப்படைக்கக் கோரி ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது
அப்போது மதுரை தல்லாகுளம் காவல்துறை ஆய்வாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மனுதாரரின் மனு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் இரு தரப்பினரையும் அணுகி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் குழந்தையை வைத்திருப்பது மனுதாரரின் கணவர் என்பதும் தெரியவந்தது. குழந்தைகளை யார் வைத்திருப்பது என்பது தொடர்பான விவகாரத்தில் இவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் அணுகி பிரச்சனையை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனர் என எழுத்துப்பூர்வமாக அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
 
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், "மனுதாரரின் மைனர் குழந்தைகள் அவர்களது தந்தையிடம் இருப்பது சட்டவிரோதம் ஆகாது. எனவே மனுதாரர் கோரிய நிவாரணத்தை ஆட்கொணர்வு மனுவில் தீர்க்க இயலாது. எனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தினை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர்.

மற்றொரு வழக்கு
 
மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கில், சுற்றுலா விடுதியா ? அல்லது தொழிலாளர்களுக்கான குடியிருப்பா ? என்பதை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
 
தேனியைச் சேர்ந்த ஆனந்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், "மேகமலையில் அனுமதியின்றி நடத்தப்படும் சட்ட விரோத ரிசார்ட்டுகளை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில் மேகமலை வனப்பகுதியில் அனுமதி இன்றி 10 முதல் 20 தனியார் ரிசார்டுகள் இயங்கி வருகின்றன. அதில் மனுதாரரின் ரிசார்ட்டும் ஒன்று" என தெரிவித்தார். அதற்கு மனுதாரர் தரப்பில், "ஒவ்வொரு கட்டிடத்தை கட்டுவதற்கு முன்பாகவும், முறையான அனுமதி பெறப்பட்டுள்ளது. அதோடு நாங்கள் தனியார் ரிசார்ட்டை நடத்தவில்லை. தொழிலாளர்களுக்கான  குடியிருப்பையே நடத்தி வருகிறோம். அதற்காக வனத்துறையினரை அணுகிய போது வனத்துறையினரின் ஆவணங்களில் எங்களுக்கு சொந்தமான பட்டா நிலம் காப்புக்காடு பகுதிக்கு அப்பாற்பட்டு இருப்பதால் அனுமதி வழங்க அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டது"  என குறிப்பிடப்பட்டது. அதற்கு அரசுத்தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
 
இதையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஜானகியை வழக்கறிஞர் ஆணையராக நியமித்தும், அவர் தேனி மாவட்ட வனத்துறை அலுவலருடன் இணைந்து குறிப்பிடப்படும் கட்டுமானத்தின் ஆவணங்களை ஆய்வு செய்து அது ரிசார்ட்டா? அல்லது தொழிலாளர்களுக்கான குடியிருப்பா ? என்பதை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்காக வழக்கறிஞருக்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்க மனுதாரருக்கும், வழக்கு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் , தேனி மாவட்ட வனத்துறை அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Embed widget