மேலும் அறிய
Advertisement
சத்தீஸ்கரில் காணமல்போன CRPF வீரரை கண்டுபிடிக்க கோரிய ஆட்கொணர்வு மனு - மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
’’சுக்மா காவல்துறை உதவியுடன் மத்திய அரசு விரைந்து சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு’’
முதுகுளத்தூரைச் சேர்ந்த வனிதா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சத்தீஸ்கர் மாநிலத்தில் சிஆர்பிஎஃப் பட்டாலியனில் பணியாற்றிவந்த கணவர் பாலமுருகனை கடந்த அக்டோபர் 17ஆம் தேதி முதல் காணவில்லை என அவர் பணிபுரியும் இடத்தில் இருந்து தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஆகவே எனது கணவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு தரப்பில், சிஆர்பிஎஃப் வீரர் உபயோகப்படுத்திய பழைய மொபைல் எண் மாற்றப்பட்டு அவர் பயன்படுத்திய மொபைலில் புதிய எண் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் இருக்கும் இடம் தெரியவந்துள்ளது மேலும் புதிய மொபைல் எண் மூலம் யாரிடம் பேசி உள்ளார் என்பது குறித்த விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா காவல்துறை உதவியுடன் மத்திய அரசு விரைந்து சிஆர்பிஎஃப் வீரரை கண்டுபிடித்து அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அழகமாநகரி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வழங்க கோரிய வழக்கு தள்ளுபடி
சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு. அதில், "சிவகங்கை மாவட்டம், அழகமாநகரி கிராமத்தில் மாசி மாதம் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் கடந்த 6 வருடங்களாக இப்பகுதியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இந்த வருடம் பிப்ரவரி 26 ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்காக பிப்ரவரி 9ஆம் தேதி அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
ஜல்லிக்கட்டு போட்டி மற்றும் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி போன்றவை நடத்துவதற்கு உரிய வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. எனவே, சிவகங்கை மாவட்டம், அழகமாநகரி கிராமத்தில் பிப்ரவரி 26 - ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி அளித்து காவல்துறை பாதுகாப்பு வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணியன், சதீஷ்குமார் அமர்வு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion