மேலும் அறிய

Madurai GH: தலைசுற்றல் பிரச்னை! இனி துல்லியமாக வீடியோவுடன் இலவசமா கண்டறிய முடியும்! எப்படி?

தலைசுற்றல் பிரச்னையை துல்லியமாக  வீடியோவுடன் கண்டறிய கூடிய வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை இலவச சிகிச்சை மையம் திறப்பு.

தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் முதன்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தலைசுற்றல் பிரச்சனையை துல்லியமாக  வீடியோவுடன் கண்டறிய கூடிய வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை இலவச சிகிச்சை மையம் திறப்பு.
 
வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை
 
தனியார் மருத்துவமனையை மிஞ்சும் வகையில் தமிழகத்தில் முதல்முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள காது மூக்கு தொண்டை பிரிவில் வீடியோ நிஸ்டாக்மோகிராபி பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது. இதனை அரசு மருத்துவமனை முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் மற்றும் தேசிய மருத்துவ ஆணையக் குழு உறுப்பினர் டாக்டர் செந்தில், ENT துறை தலைவர் டாக்டர். அழகுவடிவேல் ஆகியோர் கலந்துகொண்டு தலைசுற்றலுக்கான வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிறப்பு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தனர்.
 
தமிழகத்தில் முறை
 
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மருத்துவகல்லூரி முதல்வர் அருள் சுந்தரேஸ் குமார் பேசியபோது...,”வீடியோ நிஸ்டாக்மோகிராபி சிகிச்சை மையம் முதன்முறையாக தமிழகத்தில் இங்குதான் தொடங்கியுள்ளோம்.  இதன் மூலமாக தலைச்சுற்றல் பாதிப்போடு வரும் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தலைசுற்றலுக்கான காரணத்தை கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க முடியும்.  தலைசுற்றல் உடலில் எந்த பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, என்பதை கண்டறிய முதன்முறையாக VNG என்ற வீடியோ மூலமாக கண் அசைவுகளை கண்டறியும் முறையில் பாதிப்பை துல்லியமாக கண்டறிந்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த பரிசோதனை குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும், இந்த பரிசோதனை தனியார் மருத்துவமனைகளில் 4 ஆயிரம் முதல் 5ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்தப்படக்கூடிய நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த சிகிச்சை மற்றும் பரிசோதனை இலவசமாக நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. 
 
சிகிச்சை மையம்
 
பல்வேறு காரணங்களினால் தலைசுற்றல் உருவாகக்கூடிய நிலையில் இது போன்ற அதிநவீன சிகிச்சை மையத்தால் நோயாளிகளுடைய பாதிப்பை கண்டறிந்த அதற்கேற்ற தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு நோயாளிகளின் பாதிப்பை எளிதில் குணப்படுத்தமுடியும் எனவும், வருங்காலத்தில் இந்த சிகிச்சை மையத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்
 
மதுரையில் டெங்கு பாதிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்வர்? 
 
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 22 பெரியவர்கள் 44 சிறுவர்கள் என ஒட்டுமொத்தமாக 64 பேருக்கு காய்ச்சல் பரவல் கண்டறியப்பட்ட நிலையில் 2 பேருக்கு டெங்கு பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் வெளி நோயாளியாக நாள்தோறும் 20 க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து மதுரையில் பல்வேறு பகுதிகளில் அரசு ராஜாஜி மருத்துவமனை மூலமாக காய்ச்சல் சிறப்பு சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட்டுவருகிறது. முகாமில் பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலையில் அந்த நோயாளிக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.
 
 

தலைப்பு செய்திகள்

வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
மதுரை வெப்பம் தணிக்க பசுமைத் திட்டம்: முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
மதுரை வெப்பம் தணிக்க பசுமைத் திட்டம்: முதன்மை செயலாளர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !
அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !
அன்புக்கரம் நீட்ட வயது தடையில்லை.. 82 வயதில் ராணுவத்திற்கு உயில் எழுத்திக் கொடுத்த நபருக்கு குவியும் பாராட்டு !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget