‘என் மகனை என்கவுன்டர் செய்யப்போறாங்க’ - மதுரை பிரபல ரவுடியின் தாயார் வீடியோவால் பரபரப்பு
பிரபல ரவுடி வெள்ளைக்காளியை காவல்துறையினர் என்கவுன்டர் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவரின் தாயார் ஜெயக்கொடி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் காமராஜபுரம் பகுதியை சேர்ந்த காளிமுத்து என்கிற வெள்ளைகாளி. இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது வழக்குகள் தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காணொளி காட்சி மூலமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி தி.மு.க., முன்னாள் மண்டல தலைவர் வி கே குருசாமி பெங்களூர் அருகே வைத்து 5 பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அப்போது வி.கே.குருசாமி காயங்களுடன் தப்பிய நிலையில் குருசாமி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இந்த கொலை முயற்சி சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியது. இந்த கொலை முயற்சி வழக்கு தொடர்பாக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ராஜபாண்டி - வி.கே.குருசாமி தரப்பு மோதலின் நீட்சி என தகவல் வெளியானது.
#madurai | பிரபல ரவுடி வெள்ளைக்காளியை காவல்துறையினர் என்கவுண்டர் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவரின் தாயார் ஜெயக்கொடி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியீடு. இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— arunchinna (@arunreporter92) October 21, 2023
Further reports to follow - @abpnadu
| @LPRABHAKARANPR3 | #crime | @abpanandatv | pic.twitter.com/e1m8WHdIr2