மேலும் அறிய
Advertisement
Madurai: கட் அவுட் அல்ல அரசியல், கருத்தியல் தான் அரசியல் - மதுரையில் சீமான் பேட்டி!
ஒரு திரைப்புகழ் இருக்கும்போது ஒரு வீச்சும் ரீச்சும் அதிகம் ஆனால் கடைசி வரைக்கும் தமிழர்கள் நாங்கள் அனாதையாக இருக்க வேண்டிருக்கிறது - தவெக மாநாடு குறித்து சீமான் விமர்சனம்.
கட் அவுட் அல்ல அரசியல், கருத்தியல் தான் அரசியல் வேலுநாச்சியார் அம்பேத்கர் வைப்பது பிரச்சனை இல்லை வேலுநாச்சியார் யார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும்? - அண்ணா படம் வைக்காதது குறித்த கேள்விக்கு சீமான் பதில்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது.
தவெக மாநாடு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு ?
ஏற்படுத்த வேண்டும் ஒரு அரசியல் கட்சியை தொடங்கும் போது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் நாங்களெல்லாம் வரும்போது இவ்வளவு ஆதரவு இல்லை நாங்கள. எளிய பிள்ளைகள் ஒரு திரைப்புகழ் இருக்கும்போது ஒரு வீச்சும் ரீச்சும் அதிகம் ஆனால் எங்களுக்கெல்லாம் அப்படி இல்லை. கடைசி வரைக்கும் தமிழர்கள் நாங்கள் அனாதையாக இருக்க வேண்டிருக்கிறது. தவெக மாநாடு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன் என்றார்.
தவெக மாநாட்டு பேனரில் அண்ணா புகைப்படம் இடம் பெறாதது குறித்த கேள்விக்கு ?
அண்ணா திமுகவின் நிறுவனர் பேரறிஞர் பெருந்தகை வந்த பிறகு தான்வரும் போதுதான் தமிழக அரசியல் வரலாற்றில் தமிழர்களுடைய இலக்கியமும் வரலாறும் அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. அண்ணா மீது எனக்கு எப்போதும் மதிப்பும், அவர் மீது மரியாதையும் உண்டு நீண்ட காலம் உழைத்து அரியணைக்கு வந்து ஆட்சி அதிகாரத்துக்கு வர நினைத்தபோது கெடுவாய்ப்பாக அவருக்கு மரணம் சீக்கிரம் வந்துவிட்டது. இல்லையென்றால் தமிழகத்தில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது எனவும், அதனால் தவெக மாநாட்டில் அண்ணாவை வைக்காததற்கு இது ஒரு காரணமாக கூட இருக்கலாம். சேர சோழ பாண்டியர்கள் எல்லாம் வைத்ததால் அவருடைய பேரன் தான் அண்ணா என நினைத்தும். வேலுநாச்சியார் வைத்ததால் அவருடைய பேரன் தான் பிரபாகரன் என்று நினைத்து படம் வைக்காமல் விட்டிருக்கலாம், அதனால் ஒன்றும் இல்லை. பிரபாகரனை தான் அண்ணன் (நான்) வைத்திருக்கிறாரே என கூட நினைத்திருக்கலாம் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனை இல்லை., கட் அவுட் அல்ல அரசியல், கருத்தியல் தான் அரசியல் வேலுநாச்சியார் அம்பேத்கர் வைப்பது பிரச்சனை இல்லை வேலுநாச்சியார் யார் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் அல்லவா?நான் பேசவில்லை என்றால் சுந்தரலிங்கனாரும் வேலுநாச்சியாரும் இந்த தலைமுறைக்கு தெரிந்திருக்குமா அதுதான் முக்கியம் எனவும், அதையெல்லாம் என் தம்பி விஜய் வைத்திருக்கிறவரை பெருமை அடையுங்கள் என்றார்.
விஜயுடைய படங்களில் உங்கள் கருத்துக்களை பேசி வந்தது குறித்த கேள்விக்கு?
பிறப்பொக்கும் என நான் முதலில் கொண்டு வந்தது அதனை என் தம்பியும் எடுத்து செய்கிறார் மகிழ்ச்சி. கட்சி கொடியை பார்த்தீர்களா? நாங்கள் சிவப்பு மஞ்சள் வண்ணங்கள் சூரிய நெருப்பின் மிச்சங்கள் என கொண்டு வந்தோம். சிவப்பு மஞ்சள் ஏனென்றால் நாங்கள் போர் மரபினர் ஏரும் , போரும் எங்களுக்கு தொழில் போருக்கு போகும்போது மஞ்சள் ஆடை உடுத்தி தான் போவோம் ரத்தம் சிந்தி வீரப்போர் இருந்த மறவர்கள் என்று காட்ட சிவப்பு, மஞ்சள். எங்கள் தலைவர் அதனை கொடி வண்ணமாக கொண்டு வந்ததற்கு காரணம் காந்தள் தேசிய மலராக அது சிவப்பு மஞ்சளில் தான் இருக்கும் இந்த நாளில்தான் சிவப்பு மஞ்சளில் எங்கள் கொடியை எடுத்தோம், அதையே தம்பியும் வைத்திருக்கிறார், நாங்கள் புலி வைத்திருக்கிறோம், அவர் யானையை வைத்திருக்கிறார். எங்களுக்கு குதிரைப்படை இல்லை யானை படை தான் இருந்தது. வெள்ளைக்காரன் வந்தபோது தான் குதிரைபடை வந்தது, நமக்கு யானைதான் அதனால் அவர் அந்த வண்ணத்தை அவர் தவிர்க்கவில்லை. இதுவரை வந்த கட்சிகளுக்கும் திராவிட அடையாளமான கருப்பு சிவப்பாக இருந்தது இப்போது சிவப்பு மஞ்சளாக இருக்கிறது இது மாறுதல் தானே !
தவெக - நாதக கொள்கை சார்ந்த கூட்டணியாக அமையுமா என்ற கேள்விக்கு?
ஒரே கொள்கையாக இருந்தால் கூட்டாக தான் நிற்க வேண்டும் என்று இல்லை , ஒரே கொள்கையாக இருப்பதால் கூடாது எனவும் இல்லை இதனை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் இந்த இடத்தில் என் தம்பி தான் முடிவெடுக்க வேண்டும்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion