நம் எண்ணமே.. நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படையாக திகழ்கிறது - மதுரை மேயர் பேச்சு கவனம் பெற்றுள்ளது !
வரிமுறைகேடு விவகாரத்தில், மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில், மண்டலத்தலைவர்களை சீண்டும் வகையில் அமைந்த மதுரை மாநகராட்சி மேயரின் பேச்சு.

நம் எண்ணமே.. நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படையாக திகழ்கிறது” - மதுரை மாநகராட்சியின் மேயன் இந்திராணி பேச்சு. - மாமன்ற உறுப்பினர்கள் இன்றி வெறிச்சோடிய சுதந்திர தின விழா.
சுதந்திர தின விழா கொண்டாட்டம்
நாட்டின் 79- ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மதுரை மாநகராட்சி சார்பில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் மற்றும் கல்விக்குழு தலைவர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து நாட்டு நல பணி மாணவர்களின் மரியாதை அணிவகுப்பு செய்தனர், மரியாதையை மேயர் உள்ளிட்டவர் ஏற்றுக்கொண்டனர்.
மேயரின் பேச்சு மண்டலத்தலைவர்களை சீண்டும் வகையில் அமைந்தது.
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்ட நிலையில் மேயர் இந்திராணி பொன்.வசந்த் ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மேயர் இந்திராணி சுதந்திர தின நாளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றிய போது, நாம் எண்ணமே.. நம் மகிழ்ச்சிக்கும், துன்பத்திற்கும் அடிப்படை” என பேசியது வரிமுறைகேடு விவகாரத்தில் மண்டல தலைவர்கள் ராஜினாமா செய்த நிலையில் மண்டலத்தலைவர்களை சீண்டும் வகையில் அமைந்தது.
மேலும் சுதந்திர தின விழாவின் போது ஏராளமான மாமான்ற உறுப்பினர்கள் வருகை தராத நிலையில் மேயரின் கணவர் பொன் வசந்த் கைது செய்யப்பட்டபோது, அவருடன் பாதுகாப்பாக இருந்து கவனித்துக் கொண்ட 99ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் உசிலை சிவா மற்றும் கல்வி குழுவில் இடம் பெற்ற சில மாமன்ற உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்றனர்.





















