மேலும் அறிய

மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

மதுரை சித்திரை திருவிழாவிற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறப்பு வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக திறக்கப்படும் தண்ணீர், மதுரை செல்லூர் கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்ல திட்டம்.

மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு

 உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்த ஆண்டு 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 33 அடியாக சரிந்து உள்ளது. போதுமான நீர் இருப்பு இல்லாத காரணத்தால் மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா என்ற அச்சம் நிலவி வந்தது.  மே 1ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இருப்பில் உள்ள தண்ணீரைக் கொண்டு மதுரை சித்திரை திருவிழாவிற்கு தண்ணீர் திறக்க முடியுமா? என்று பொதுப்பணித்துறையினர் தீவிர ஆலோசனைகள் ஈடுபட்டு வந்தனர்.  

அணையிலிருந்து ஆற்றுப் படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டால் கடும் வெயில், வறண்டு போன நிலம் இதன் காரணமாக தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த பொதுப்பணி துறையினர் மாற்று ஏற்பாடுகளை ஆராய்ந்தனர்.  வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.  மொத்தமாக 170 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று முதல் வருகிற 29ஆம் தேதி வரையில் தண்ணீர் திறக்க முடிவு செய்து வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது . வைகை அணையில் இருந்து பாசன கால்வாய் வழியாக மதுரை கொண்டு செல்லப்படும் தண்ணீர் முதற்கட்டமாக மதுரை செல்லூர் கண்மாயில் தண்ணீரை தேக்கி வைத்து, அங்கிருந்து கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறப்பு

இது தவிர மதுரை கொண்டமாரி ஓடை வழியாகவும் மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளனர். மதுரை சித்திரை திருவிழாவை போலவே சோழவந்தான் பகுதியிலும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறும். அந்த நிகழ்விற்கும் தண்ணீர் வழங்கும் வகையில் ராமராஜபுரம் பகுதியில் இருந்து சோழவந்தான் பகுதிக்கு தண்ணீர் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சரிந்து பரிதாபமான நிலையில் காணப்படும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 முதல் 5 அடிவரை சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடி வசதிகள் திறப்பு: பக்தர்கள் மகிழ்ச்சி!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
சிவகங்கை வேலைவாய்ப்பு முகாம்: ஆகஸ்ட் 21 - இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !
மதுரை அரசுப் பள்ளியில் கொடியேற்றினாரா த.வெ.க., நிர்வாகி? - பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget