மேலும் அறிய

திருச்செந்தூர் கோயில் திருசுதந்திரர்கள் தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை 

திருச்செந்தூர் கோவில் திருசுதந்திரர்கள் தொடர்பாக, இந்து சமைய அறநிலையத்துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  ஏப்ரல் 1-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில், திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள பழக்கவழக்கங்களின்படி கைங்கர்யம் செய்வதற்காக அடையாள அட்டை பெறுவதற்காக திரிசுதந்திரர்கள் பெயர் மற்றும் முகவரி, காவல்துறை சான்று,  ஒழுங்கீனமாக நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி அளித்து விண்ணப்பிக்க வேண்டும். திருசுதந்திரர்கள் தனிப்பட்ட முறையில் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக்கூடாது. பக்தர்களிடம் சண்டை, சச்சரவில் ஈடுபடக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது .இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திருச்செந்தூர்  ஸ்ரீ ஜெயந்திநாதர் திரிசுதந்திரர்கள் காரியஸ்தர் ஸ்தானிகர் சபை செயலர் நாராயணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "திருசுதந்திரர்களுக்கு கோயிலில் பரம்பரை பரம்பரையாக இருந்து வரும் கைங்கர்யம் செய்யும் உரிமையை நிலை நாட்டுவதற்கு உரிமை உள்ளது. ஆகவே அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஸ் உபாத்யாய், விஜயகுமார் அமர்வு,  அந்த உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராமின்  உப்பளத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி அதனை அகற்றுமாறு பஞ்சாயத்து தலைவர் அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை 
 
தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜாராம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார் அதில் " தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகாவுக்கு உட்பட்ட கீழஅரசரடி பகுதியில் 0.90 ஹெக்டர் பரப்பளவில் உப்பளம் நடத்தி வருகிறோம். இங்கு 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இவர்கள் அனைவரும், இந்த உப்பளத்தில் இருந்து வரும் வருமானத்தை நம்பியே உள்ளனர். காந்தி மல்லர் என்பவர், உப்பளம் அமைந்துள்ள இடங்களை அகற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவின் அடிப்படையில் வட்டாட்சி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில் எங்கள் உப்பளம் அமைந்துள்ள பகுதி புறம்போக்கு நிலம் என வருவாய் துறை ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், உப்பளத்தை அகற்ற வேண்டுமென்றும் கீழஅரசரடி பஞ்சாயத்து தலைவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் நான் இதுநாள் வரை எல்லாவிதமான வரியையும் முறையாக கட்டியுள்ளேன். ஆகவே, தொடர்ந்து எங்கள் உப்பளத்தை இயக்கவும், உப்பளத்தை அகற்றுமாறு கீழஅரசரடி பஞ்சாயத்து  தலைவர் அனுப்பிய  நோட்டீஸை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் விஜயகுமார் அமர்வு கீழ அரசரடி கிராம பஞ்சாயத்து தலைவர்  அனுப்பிய நோட்டீஸிற்கு இடைக்கால தடை விதித்து வழக்கு விசாரணையை இதோடு தொடர்புடைய மற்றொரு வழக்குடன் பட்டியலிட  உத்தரவிட்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
நல்லா இருக்கீங்களா அம்மா? நேரில் நலம் விசாரித்த முதல்வர்.. சர்ப்ரைஸ் ஆன பாட்டி!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
Embed widget