மேலும் அறிய

மைசூருவில் உள்ள கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டுகள், ஆவணங்களை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு மாற்ற தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மணிமாறன் என்பவர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கிருபாகரன், துரைசாமி அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது, சென்னையில் உள்ள தொல்லியல்துறை கல்வெட்டியல் கிளையை, தமிழ் கல்வெட்டியல் கிளை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். தமிழ் தொடர்பான அனைத்து ஆவணங்கள், தமிழ் கல்வெட்டுகள் போன்ற அனைத்தையும் மைசூரிலிருந்து சென்னை தமிழ் கல்வெட்டியல் கிளைக்கு 6 மாதத்திற்குள் மாற்ற வேண்டும். தொல்லியல் துறையில் உள்ள கல்வெட்டியல் பிரிவு  உள்ளிட்ட பிரிவுகளில் போதுமான அளவு நிபுணர்களை பணியமர்த்த வேண்டும். சென்னையில் உள்ள தமிழ் கல்வெட்டியல் பிரிவிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு 6 மாதத்திற்குள்ளாக செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மைசூருவில் உள்ள கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவு

முன்னதாக, இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘வரலாற்று ஆவணங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்கள், பனை ஓலை குறிப்புகள், அகழாய்வுப் பொருட்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப்பெறுகின்றன. பழம் வரலாற்றிற்கு ஆதாரமாக பெரும்பாலான தகவல்கள் கல்வெட்டுக்களில் இருந்து கிடைக்கப் பெற்றதால், அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழ்நாடு அரசு 1961ஆம் ஆண்டு தொல்லியல் துறையை, கல்வெட்டியல் துறையை ஏற்படுத்தியது. இதன் முக்கிய பணி தமிழ்நாட்டின் பழங்கால நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது, அகழாய்வு செய்து பழம்பெருமைக்கு ஆதாரமாகத் திகழும் பொருட்களை ஆவணப்படுத்தி பாதுகாப்பது, பழமைக்கு ஆதாரமான கலை, சிற்பம் போன்றவற்றை பாதுகாப்பது, அவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவையே. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்டு, கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 65 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழோடு தொடர்புடையவை. ஆனால் அவை இன்றுவரை பதிப்பித்து வெளியிடப்படவில்லை. இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு மைசூர் கல்வெட்டியல் அலுவலகம் பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் கல்வெட்டு தொடர்பான ஆவணங்கள் அதில் சிதைவடைந்திருந்தால் தமிழர்களின் பாரம்பரியம், பழமையான வரலாறு தொடர்பான ஆவணங்களை இழந்தவர்களாவோம்.  ஆகவே மைசூரில் உள்ள கல்வெட்டியல் துறையில் உள்ள தமிழ் மொழி தொடர்பான கல்வெட்டுக்களை தமிழக தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் கல்வெட்டியல் துறையிடம் ஒப்படைக்கவும், அவற்றை அரசியலமைப்புச் சட்டப்படி,  பாதுகாக்க, நவீன தொழிநுட்ப முறையில் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget