விஜயுடன் கூட்டணியா? - டாக்டர் கிருஷ்ணசாமி சொன்ன பதில் என்ன?
இம்மானுவேல் சேகரன் நினைவிட பேருந்து முறைகேடு: 5 கோடி ஊழல் குற்றச்சாட்டு! டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமைய வேண்டும், விஜய் அதனை முன்னெடுப்பார் என்றால் கூட்டணி குறித்து பரீசிலிப்போம் என டாக்டர்.கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
ரசீதுகளும் வழங்கப்படவில்லை
புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத்தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை அழகர்கோவில் சாலை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற பொதுமக்களை அழைத்து செல்வதற்கான அரசு பேருந்துகள் அமைப்பதில் 5 மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளுக்கு கடந்த ஆண்டு வரை 1 கி.மீக்கு 40 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டு அதில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. கிராமங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்கு 12 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 26 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் உயர்த்தியிருக்கிறார்கள், இதற்கான ரசீதுகளும் வழங்கப்படவில்லை. மேலும் அரசு பேருந்துகளில் கடந்த ஆண்டுவரை ஓட்டுனர் நடத்துனர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடத்துனர் இல்லை. வாடகைக்கு பிடிக்கப்பட்ட பேருந்துகளுக்கு பயண சீட்டுகள் கட்டாக கொடுத்து விடுகிறார்கள். ஆனால் அதனை கூட மீண்டும் எடுத்துசென்றுவிட்டார்கள். இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு அரசு பேருந்து அமர்த்தப்பட்டு வாடகைக்கு விடப்பட்டதில் சுமார் 5 கோடி வரை மோசடி நடந்துள்ளது. இது குறித்து தமிழகம் முழுவதும் எத்தனை பேருந்து இயக்கப்பட்டது, ஏன் ரசீது கொடுக்கப்படவில்லை தமிழ்நாடு அரசு போக்குவரத்துதுறை விளக்கம் தர வேண்டும். இல்லையெனில் போக்குவரத்து மண்டல அலுவலர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும்.




















