மேலும் அறிய
Advertisement
மதுரையில் நடுரோட்டில் கிடந்த பாதி எரிந்த தலை! பயத்தில் தெறித்து ஓடிய வாகன ஓட்டிகள்!
மதுரையில் பாதி எரிந்த நிலையில் தலை ஒன்று நடுரோட்டில் கிடந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
உடலை தேடி வந்த போது அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்தபோது தலை பாதி எரிக்கப்பட்ட நிலையில் நாய் இழுத்து வந்துள்ளது.
சாலையில் கிடந்த தலையால் பரபரப்பு
மதுரை திருப்பாலை காவல்நிலையம் அருகேயுள்ள வாசுநகர் எதிர்புறம் நத்தம் சாலையின் நடுவே இன்று காலை 60 வயது மதிக்கத்தக்க நபர் பெண் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சாலையில் கிடந்துள்ளது. இதனையடுத்து அந்த வழியாக சென்ற பொதுமக்களில் ஒருவர் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தல்லாகுளம் காவல்துறையினர் சாலையில் கிடந்த தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மோப்பநாய் உதவியுடன் தலை கிடந்த சுற்றுவட்டார பகுதிகளில் காவல்துறையினர் உடலை தேடிவந்தபோது, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது தலை பாதி எரிக்கப்பட்ட நிலையில் நாய் இழுத்து வந்துள்ளது. இது குறித்து தெரியவந்த நிலையில் அருகிலுள்ள நாகனாகுளம் மயானத்தில் நேரில்சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
தலை மட்டும் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளது
இந்த விசாரணையில் மதுரை நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற 70 வயது மூதாட்டி நேற்று முன்தினம் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடல் நேற்று முன்தினம் எரியூட்டபட்ட போது மழை பெய்துள்ளது. இதனால் குடும்பத்தினர் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் தலை மட்டும் பாதி எரிந்த நிலையில் இருந்தபோது கவனக்குறைவால் மயான ஊழியர்கள் தலையை பார்க்காமல் விட்டுள்ளனர்.
இதையடுத்து மயானத்தில் இருந்து இன்று காலை நாய் பாதி எரிந்த நிலையில் கிடந்த தலையை இழுத்து வந்து சாலையில் போட்டது தெரியவந்துள்ளது. இதனை பேச்சியம்மாளின் குடும்பத்தினர் உறுதிப்படுத்திய நிலையில் காவல்துறையினர் தலை கிடந்த சம்பவம் தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TABCEDCO Loan Schemes: விவசாயிகளுக்கான எளிய கடன் - வெறும் 6% மட்டுமே வட்டி - கொட்டி கொடுக்கும் தமிழக அரசு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kanguva: உலகெங்கும் ரிலீசானது கங்குவா! தியேட்டரை திருவிழாவாக மாற்றும் சூர்யா ஃபேன்ஸ்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion