மேலும் அறிய
Advertisement
62 சென்ட் இடத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் - மதுரையில் மினி மியாவாக்கி..!
மதுரை ரோட்டரி சங்கம் சார்பில் மியா வாக்கி காடுகள் சுமார் 62 சென்டில் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
ஜப்பானை சேர்ந்த டாக்டர் அகிரா மியாவாக்கி அந்த நாட்டின் யோகோஷாமா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர். தாவரவியலாளர் மியாவாக்கி `இடை வெளி இல்லா அடர்காடு' எனும் முறையைப் பின்பற்றி குறைந்த இடத்தில் அதிக மரங்களை விரைவாக வளர வைக்கும் முறையை கண்டறிந்தார். மியாவாக்கி இந்த முறையில் சுமார் நான்கு கோடி மரங்களுக்கு மேல் வளர்த்து சின்னச் சிறு காடுகளாக உருவாக்கி அசத்தினார்.
#மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் சார்பில் மியா வாக்கி காடுகள் கே.புதூர் சிட்கோ பகுதியில் 6# செண்டில் 3 ஆயிரம் நாட்டு வகை மரக் கன்றுகள் நடப்பட்டது. இதில் ரோட்டரி சங்க் ஆளுநர் ஜெரால்டு, செயலர் பொன்குமார் உள்ளிட்டோர் கல்ந்துகொண்டனர்.@Rotary | @RotaryRassin | @WeTamilans | #Madurai pic.twitter.com/BkrHa4FLYB
— arunchinna (@arunreporter92) December 2, 2022
இதற்காக 2006 -ல் சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பிடமிருந்து `புளூ பிளானெட்' எனும் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவரின் தத்துவ முறையில் உருவான அடர்வனம், மியாவாக்கி என அழைக்கப்படுகிறது. இந்த முறையானது இந்தியா முழுதும் பல இடங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் இந்த முறையைப் பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
மதுரை மேற்கு ரோட்டரி சங்கம் கடந்த சில வருடங்களாக மியா வாக்கி காடுகளை உருவாக்கி வருகின்றனர். இந்நிலையில் கே.புதூர் பகுயியில் உள்ள சிப்கோவில் இருக்கும் சுமார் 62 சென்ட் காலி இடத்தில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்துள்ளனர். இதற்காக கடந்த 20 நாட்களாக குப்பைகள் அகற்றுதல், மண்ணை சரி செய்தல், இயற்கை உரம் இடுதல் என மண்ணை தரமானதாக மாற்றி இந்த மியாக்கி காடுகளுக்கு பணிகளை செய்துள்ளனர். இந்நிலையில் இந்த இடத்தில் கொய்யா, நாவல், புங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டின மரங்களை நடவு செய்துள்ளனர்.
130 நபர்களை கொண்டு மதுரை மேற்கு ரோட்டி சங்கத்தினர் மியா வாக்கி காடு உருவாக்கும் விழாவில் கலந்துகொண்டனர். இதில் ரோட்டரி சங்க ஆளுநர் ஜெரால்டு மரக்கன்றுகளை நடவு செய்து மியாவாக்கி காட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும் இதில் ரோட்டரி சங்கத்தின் பிரசிடெண்ட் ராமநாதன், செயலர் பொன் குமார், சிட்கோ இ.இ கோபால கிருஷ்ணன், மடீசியா எம்.எஸ் சம்பத் , கப்பலூர் சிப்கோ கண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion