மேலும் அறிய
நிகிதா மீது பகீர் குற்றச்சாட்டு! அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிய அதிர்ச்சி பின்னணி!
நகை தொலைந்ததாக புகார் அளித்துள்ள நிகிதாவின் மோசடி வழக்குகளில் தொடர்புடைய குடும்பம் - அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட தெய்வம் கண்ணீர் மல்க பேட்டி.

நிகிதா
Source : whats app
பணமோசடி வழக்கு
மடப்புரம் விவகாரத்தில் கோயில் காவலாளி அஜித் குமார் காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த விவகாரம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து திருப்புவனத்தில் புகார் அளித்த நிகிதா மீது ஏற்கனவே 2011 ம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் பண மோசடி வழக்கு இருப்பதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் திருப்புவனத்தில் நகை தொலைந்ததாக புகார் அளித்துள்ள நிகிதாவின் மோசடி வழக்குகளில் தொடர்புடைய குடும்பம் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்..,” மோசடியில் ஈடுபட்ட நிகிதா மற்றும் சிவகாமி குடும்பத்தினர் என்னுடைய உறவினர்கள். இரண்டு நாளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2010 ஆம் ஆண்டு ஒன்பது லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டனர். பணத்தை திரும்ப கேட்டபொழுது ஏமாற்றி எங்களை மிரட்டி அனுப்பி விட்டனர். தற்போது புகார் அளித்துள்ள நிகிதா என்னிடம் மாணவியாக பி.எட் பயின்றவர்.
பொய்யான தகவலாக இருக்கலாம்
எங்களை மட்டுமல்ல இது போன்று பலரையும் இந்த குடும்பத்தினர் ஏமாற்றி உள்ளார்கள். இது சம்பந்தமாக திருமங்கலம் காவல் நிலையத்தில் இவர்கள் மீது (2011) வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து பலமுறை பணம் கேட்ட பொழுதும் எங்களுக்கு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர் என கண்ணீருடன் தெரிவித்தார். மேலும், பல வேலைகளில் தாங்கள் சாப்பிட கூட முடியாமல் இருந்ததாகவும் அப்போதும் கூட இவர்கள் சிறிதளவு பணத்தை கூட திரும்ப தரவில்லை .இவர்கள் கரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். தற்போது திருப்புவனத்தில் நகை தொலைந்தாக கூறப்பட்டிருப்பது கூட பொய்யான தகவலாக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இந்த மோசடியில் நிகிதாவின் அம்மா சிவகாமி ஜெயப்பெருமாள் டெப்டி கலெக்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். நிகிதாவின் தந்தை கவி என்ற வைபவ் சரண் கவி ஆகியோர் குடும்பத்தை நம்பி நானும் என்னுடைய மாப்பிள்ளை வினோத்திற்கு வி.ஏ.ஓ வேலைக்காகவும் மொத்தம் 16 லட்ச ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்ததாக தெய்வம் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















