மேலும் அறிய
Advertisement
50 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மாடக்குளம் கண்மாய் - பாரம்பரிய முறையில் விழா எடுத்த மதுரை வாசிகள்
50ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கண்மாய் - நடுகல் கம்பு கட்டும் பாரம்பரிய திருவிழா எடுத்த கொண்டாடிய கிராம மக்கள்.
மீனாட்சியின் அம்மன் கோயில் கோபுரம், ஒத்தக்கடை யானை மலை, வண்டியூர் தெப்பக்குளம், திருமலை நாயக்கர் மஹால் இப்படி பெயர்பெற்ற அடையாளங்களுக்கு அடுத்தபடியா மாடக்குளம் கண்மாயும் மதுரையில் பெயர் பெற்றது. "யப்பே எத்தந்தண்டி கம்மா"னு புதுசா பாக்குற மதுரை காரங்களையே வியக்க வைக்கும். சிலம்பம், ஜல்லிக்கட்டு என்று வீரம் விளைந்த மாடக்குளம் கிராமத்திற்கு இயற்கை எழில் கொஞ்சம் இந்த கண்மாய் தான் மெரினா பீச்.
இந்த கண்மாய் மதுரை மாநகருக்கு உட்பட்ட வருகிறது. 680ஏக்கர் பரப்பளவில் 251 ஹெக்டேர் பரப்பளவில் 5.44 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்மாயாக உள்ளது. இது நகர் பகுதியில் உள்ள மாடக்குளம், பழங்காந்த்தம், மகபூப்பாளையம், எல்லிஸ்நகர் என பல்வேறு பகுதிகளுக்கு நீர் ஆதரமாக விளங்ககூடியது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து வரக்கூடிய நீரை வாய்க்கால்கள் மூலமாக கொண்டுவரப்படும். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அதிக அளவிற்கு மழைபெய்துள்ள நிலையில் வைகை அணை முழுக்கொள்ளவை எட்டியுதால் திறந்துவிடப்பட்ட தண்ணீரை வைகை ஆற்றிலிருந்து மாடக்குளம் கண்மாய்க்கு கொண்டுவரப்பட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்கு பின் தற்போது கண்மாயின் முழு அளவை எட்டிக்கூடியதை அடையாளப்படுத்தும் குத்துக்கல்கள் மூழ்கியது.
இதனையடுத்து மாடக்குளம் கிராம மக்கள் கண்மாயின் கரையோரத்தில் உள்ள அய்யனார் கோயிலில் பாரம்பரிய முறைப்படி குத்துக்கல் மீது கம்பை நடும் பாரம்பரிய விழாவானது வெகுவிமர்சையாக நடைபெற்றது. கண்மாய் முழுமையாக நிரம்புவதை பாரம்பரியமாக கொண்டாடும் வகையில் கிராம மரபுவழி மடை வேலைபார்க்கும் குடும்பத்தினர் கண்மாய் கரையில் இருந்து தண்ணீரில் நீந்தியபடி சாமிக்கு படைத்த மூங்கில் கம்புகளை எடுத்து சென்று குத்துக்கல் மீது நட்டுவைத்து குலவையிட்டனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் , கிராம பெரியோர்கள் கலந்துகொண்டனர்.
50 ஆண்டுகளுக்குப் பின்பு கண்மாய் முழுமையாக நிரம்ப உள்ளதால் நடைபெற்ற இந்த பாரம்பரிய விழா என்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடல்போன்று நீர் ரம்பி காட்சியளித்த கண்மாயில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாடக்குளம் கண்மாயில் நீர் நிறைந்துள்ளதால் ஒட்டுமொத்த மதுரை நகர மக்களுக்கும் குடிநீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. 1400 மீட்டர் ஆழம் கொண்டுள்ளது. இந்த கண்மாய் மூலமாக 2576 ஏக்கர் பாசன வசதி பெறும். கடந்த 2019 ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் தூர்வாரப்பட்டதன் காரணமாக தண்ணீர் முழுமையாக நிரம்பியுள்ளது என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivaganga | ஆண்கள் காது வளர்க்கணும்... ஏன்னா வரலாறு அப்படி.! சிவகங்கை செகுட்டை அய்யனாரும் நம்பிக்கையும்!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion