கொடைக்கானல் : விதிகளை பின்பற்றாமல் வருகைதரும் சுற்றுலா பயணிகள்.. காற்றில் கலக்கும் லாக்டவுன் விதிகள்..!
மாவட்ட ஆட்சியர் உத்தரவை மீறி, கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் வெளிமாநில சுற்றுலா பயணிகளை முறையாக சோதனை செய்யாமல் அனுமதிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கடந்த சில தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக கேரளா, உள்ளிட்ட வெளிமாநிலங்களிருந்து வரும் சுற்றுலா பயணிகள் 72 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் காண்பித்த பிறகே கொடைக்கானலுக்குள் அனுமதி என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்,
இந்நிலையில் வார விடுமுறையான இன்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது, மேலும் கொடைக்கானல் நுழைவாயில் சோதனை சாவடியில் சுகாதார துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர் . இதில் கேரளா, கர்நாடகா, பாண்டிசேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகை சற்று அதிகமாக காணப்பட்டது. இவர்களை முறையான சோதனை மேற்கொள்ளாமல் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்,மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மீறி சுகாதார துறை செயல்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி கூடுதலாக சுகாதார துறை பணியாளர்களை பணியில் அமர்த்தி வெளிமாநில சுற்றுலா பயணிகளை முறையாக சோதனை செய்து கொடைக்கானலுக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது .
கொடைக்கானல் சுற்றுலா தலத்திற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த சில வாரங்களாக சுற்றுலா பயணிகள் கடும்கட்டுப்பாடுகளுடன் கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதி அளித்து வந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மூன்றாம் அலை நெறுங்கிவருவதாக அதனை தடுக்கும் வகையில் தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காற்றில் கலந்ததுபோல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை எந்தவித கட்டுப்படுகள் இன்றி வருவதால் கொடைக்கானல் பகுதியில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்யுகள் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கொடைக்கானல் வட்டக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டதால் வட்டக்கானல் பகுதிக்கு சென்று தனியார் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கும் காவல்துறைக்கும் சோதனை சாவடியில் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வட்டக்கானல் பகுதியில் தங்கும் விடுதிகளில் முன்பதிவு செய்த ரசீதைக் காண்பித்த பிறகே வட்டக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
வீடியோ பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்,
நாங்க வேற மாதிரி.. கெத்து காட்டும் தேனி இளசுகள் | Theni | Jallikattu Vadam | Jallikattu |