(Source: ECI/ABP News/ABP Majha)
சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை - அனுமதி எப்படி வழங்கப்பட்டது என நீதிமன்றம் கேள்வி
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
காவலர்கள் 1,353 பேருக்கு சொந்த ஊர்களுக்கு பணியிட மாறுதல் - டிஜிபி சைலேந்திரபாபு
இதனால் வனப் பகுதியில் இருக்கக்கூடிய புள்ளிமான், குரங்கு, சாம்பல் நிற அணில், நரி, மயில் போன்ற வனவிலங்குகளும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ராயன்பட்டி, செட்டிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி செல்லும் குழந்தைகள் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி உள்ள நிலையில், மதுக்கடையால் மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். வளரிளம் மாணவர்கள் இதனால் தவறான பாதைக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது. மதுக்கடையை கடந்து செல்லும் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இந்த மதுக்கடையை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி மணிபல்லம் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடை செயல்பட இடைக்கால தடை விதிப்பதோடு, கடையை வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
ஸ்டெர்லைட் ஊழியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு, சமூக காடுகளுக்கு அருகே மதுக்கடை செயல்பட எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? பள்ளி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் இல்லையா?என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மாற்றுப்பாதை ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.