மேலும் அறிய

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடி திருவிழா பூஜை நடத்த அறங்காவலர் குடும்பத்தினருக்கு அனுமதி மறுத்த அறநிலைத்துறையினர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில். இத்திருக்கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  இந்த கோயில் தற்போது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் கோயிலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இந்நிலையில், இந்து சமய அறநிலை துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காரணம் கோயிலில் கொடிமரம் மற்றும் உப சன்னதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.

Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

அதனால் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து திருவிழா ரத்து என அறிவிக்கப்பட்டது. ஆனால் திருவிழா நடைபெற வேண்டும் என்றும் திருவிழாவில் கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கிட கோரி அறங்காவலர் குழுவினர் நீதிமன்றத்தை நாடி பூஜை செய்வதற்கு அனுமதி பெற்று வந்தனர். கடந்த முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு திருவிழா துவங்கியது. இதில் பூஜை செய்வதற்கு அறங்காவர் குழுவினர் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பு நிறையும் அழைத்து காவல்துறையினர் போடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

மகளிர் தொகை கொடுத்துவிட்டு நாங்க படுற பாடு இருக்கே? - புலம்பிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

ஆடிப்பெரும் திருவிழா; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் வழிபாட்டுக்கு சிக்கல்

இதில் பூஜை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த பூஜையானது கருவறைக்குள் சென்று நடத்துவதா? அல்லது கோயில் வளாகத்தில் பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று தெளிவாக குறிப்பிடவில்லை. மேலும் அறநிலை துறை அதிகாரிகள்  உயர் அதிகாரிகளிடமும் வழக்கறிஞர் குழுவிடமும் இந்த தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டு மூன்று தினங்களுக்கு பின்பே இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து பரம்பரை அறங்காவலர் குழுவினர் தாங்கள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறோம் என்று கூறி சென்றனர். ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும் இந்த சூழலில் இச்சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
Chennai Rains: உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruvarur News : தந்தை தூய்மை பணியாளர் மகள் நகராட்சி ஆணையாளர் ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை!Madurai DMK Councilor : சுக்குநூறான பலகார கடைசூறையாடிய திமுக கவுன்சிலர்!பரபரப்பு சண்டை காட்சி!Kamal Haasan Ulaga Nayagan | அஜித் பாணியில் கமல்! திடீர் அறிவிப்பு ஏன்? உலக நாயகன் 24 வருட பின்னணிEPS ADMK Alliance | ”பாஜகவுக்கு NO சொன்ன EPS” விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்!முதல்வர் வேட்பாளர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
V.K.T. Balan: மதுரா டிராவல்ஸ் தலைவர் கலைமாமணி வி.கே.டி. பாலன் காலமானார்.!
Chennai Rains: உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
உருவாகும் காற்றழுத்தம்! சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை; எத்தனை நாட்கள் தெரியுமா.!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
Chennai Rain Alert: இரவு பார்த்து சீக்கிரமா வீட்டுக்கு போங்க! சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை இருக்கு!
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
மணிப்பூர்: 11 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படை அதிரடி - என்ன நடந்தது?
Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
Breaking News LIVE 11th NOV: மோடிக்கு பரம எதிரி தமிழும் தமிழ்நாடும்தான் - விளாசும் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன்
முன்னாள் அமைச்சர் மீது கொலைவெறித் தாக்குதல் - கொதித்தெழுந்த இபிஎஸ் - நடந்தது என்ன?
முன்னாள் அமைச்சர் மீது கொலைவெறித் தாக்குதல் - கொதித்தெழுந்த இபிஎஸ் - நடந்தது என்ன?
யாருப்பா நீ? பல பெண்களுடன் உல்லாசம்; வெளியான 400 ஆபாச வீடியோக்கள்: வசமாக சிக்கிய அரசு அதிகாரி!
யாருப்பா நீ? பல பெண்களுடன் உல்லாசம்; வெளியான 400 ஆபாச வீடியோக்கள்: வசமாக சிக்கிய அரசு அதிகாரி!
“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!
“கவுன்சிலராக கூட ஜெயிக்கல; காசு கொடுத்து அண்ணாமலை செய்யும் காரியம்” - பகீர் கிளப்பும் எஸ்.வி.சேகர்!
Embed widget