லாரியும் பேருந்தும் மோதி விபத்தில் 100 அடி பள்ளத்தில் விழுந்த பெண் - கொடைக்கானலில் பரபரப்பு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கொடைக்கானல் மலைச்சாலை டம்டம் பாறை பகுதியில் டிப்பர் லாரியும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்து.
கொடைக்கானல் சாலையில் டிப்பர் லாரி மற்றும் தனியார் பயணிகள் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் பேருந்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் சிறு சிறு காயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் வத்தலகுண்டு மற்றும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரு விபத்து தடுக்கப்பட்டு உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேருந்து, தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடி உள்ள நிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்தை சீர் செய்யும் பணியை தேவதானப்பட்டி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் .
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டம்டம் பாறை என்ற இடத்தில் கொடைக்கானல் சாலையில், கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதி வேகமாக வந்த டிப்பர் லாரியும், வத்தலகுண்டில் இருந்து கொடைக்கானல் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும் மோதிய விபத்தில் தனியார் பேருந்து சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கியது.
Congress: காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை முடக்கிய வருமானவரித்துறை; ராகுல் காந்தி கண்டனம்
இந்த விபத்தின் போது தனியார் பேருந்து முன் இருக்கையில் அமர்ந்திருந்த நித்தியா என்ற பெண் தூக்கி வீசப்பட்டு 100 அடி பள்ளத்தில் விழுந்தார். மேலும் பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.100 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட பெண்ணை தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து படுகாயங்களுடன் இருந்த நிலையில் கயிறு கட்டி மேலே தூக்கி வந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
மேலும் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் சிறு காயங்கள் ஏற்பட்டவர்களை பெரியகுளம் மற்றும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நல்வாய்ப்பாக இந்த விபத்தில் பேருந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் உருண்டு விழுந்து இருந்தால், பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
Siren Review: தமிழ் சினிமா தொடாத கதை.. ஜெயம் ரவியின் “சைரன்” படத்தின் முழு விமர்சனம் இதோ..!
மேலும் சம்பவ இடத்திற்கு தேவதானப்பட்டி காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதோடு கொடைக்கானல் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த தனியார் பேருந்து மீட்ட பின்பு போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.