மேலும் அறிய

Tajmahal In Kodaikanal : கொடைக்கானலில் காதலர்களை காதல் கொள்ளவைத்த காதல் சின்னம் தாஜ்மஹால்..!

கொடைக்கானலில் காதலர் தினத்தை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் காதலின் சின்னமான தாஜ்மஹாலை பூக்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

காதலர் தினத்தை கொண்டாட சர்வதேச சுற்றுலா நகரான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த காதல் ஜோடிகள் குவிந்துள்ளனர். இதனிடையே கொடைக்கானலுக்கு வருகைபுரிந்த காதலர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை அங்கு நிலவிய இதமான சீதோஷ்ணநிலை மாலையிட்டு வரவேற்பது போல் இருந்தது. மாலை நேரத்தில் மேக மூட்டங்கள் தரை இறங்கியதை அவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு களித்து புகைப்படங்கள் எடுத்தனர்.

Tajmahal In Kodaikanal : கொடைக்கானலில் காதலர்களை காதல் கொள்ளவைத்த காதல் சின்னம் தாஜ்மஹால்..!

அத்துடன் சுற்றுலா பயணிகள் ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றில் பூத்துக்குலுங்கிய மலர்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்ததுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். குறிப்பாக பூங்காக்களில் இளம்ஜோடிகளின் வருகை அதிகம் இருந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tajmahal In Kodaikanal : கொடைக்கானலில் காதலர்களை காதல் கொள்ளவைத்த காதல் சின்னம் தாஜ்மஹால்..!

மேலும், கொடைக்கானலில் பிரகாசபுரம், குண்டுப்பட்டி, கவுஞ்சி உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பசுமை குடில்கள் அமைத்து உயர்ரக கொய்மலர்களான காரனேசன், ஜெர்பரா மற்றும் பல்வேறு வண்ண ரோஜாக்களை சாகுபடி செய்து வருகின்றனர். இந்த கொய்மலர்கள் சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Tajmahal In Kodaikanal : கொடைக்கானலில் காதலர்களை காதல் கொள்ளவைத்த காதல் சின்னம் தாஜ்மஹால்..!

இன்று காதலர் தினத்தன்று இந்த உயர்ரக கொய்மலர்களை காதலர்கள் தங்களது காதலிக்கு பரிசாக கொடுத்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வகையிலான மலர் நாற்றுக்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.Tajmahal In Kodaikanal : கொடைக்கானலில் காதலர்களை காதல் கொள்ளவைத்த காதல் சின்னம் தாஜ்மஹால்..!

இந்த நிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் காதலர்களை கவரும் விதமாக காதலர்களின் சின்னமாக இருக்கும் தாஜ்மஹால் பூக்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பூங்காவில் பூத்த ஹைட்ரேஞ்சிய எனப்படும் வெள்ளை நிற பூக்களை வைத்து தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவத்தின் முன்பு சுற்றுலாப் பயணிகள் மற்றும் காதலர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தும் வருகின்றனர். இரண்டு நாட்கள் இந்த வடிவம் பொருத்தப்பட்டு இருக்கும் என தோட்டக்கலை துறையினர் தெரிவித்துள்ளனர் .

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget