keezhadi Excavation: கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு ; தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !
10-ம் கட்ட அகழாய்வுப் பணியில் 15க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![keezhadi Excavation: கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு ; தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி ! keezhadi Excavation Lower Phase 10 Excavation Finding Algae, Glass Beads; Archeology enthusiasts rejoice - TNN keezhadi Excavation: கீழடி 10ம் கட்ட அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு ; தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சி !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/1e53cf372a5803f10d7ec66f71159fcd1719227293849184_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இரு குழிகளும் ஒன்றரை அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில், அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் அறிவித்துள்ளார்.
keezhadi excavation ; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 18-ம் தேதி தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளின் தொடக்கமாக சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியான கொந்தகை, விருதுநகர் மாவட்டம்- வெம்பக்கோட்டை, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டம் - மருங்கூர் ஆகிய 8 இடங்களில் அகழாய்வுப் பணிகளை தொடங்கி வைத்தார்.
தமிழர் வரலாறு
தமிழ்நாடு 15 இலட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்ட நிலப்பரப்பாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையே மட்டுமின்றி உலகத் தமிழர்கள் இடையேயும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ச் சமூகமானது, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் படிப்பறிவும் எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கரிமப் பகுப்பாய்வுகளின் முடிவுகள் வாயிலாக உறுதியாக நிலைநிறுத்தியுள்ளது.
கீழடியில்10-ம் கட்ட அகழாய்வு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில்10ம் கட்ட அகழாய்வில் கண்ணாடி மணிகள், பாசிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். கீழடியில் ஜவஹர், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரது ஒன்றரை ஏக்கர் நிலங்களில் 12 குழிகள் தோண்டப்பட்டு பத்தாம் கட்ட அகழாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஐந்து நாட்களில் இரண்டு குழிகள் மட்டும் தோண்டப்பட்டு பணிகள் நடந்து வந்தன. இரு குழிகளும் ஒன்றரை அடி ஆழம் வரை தோண்டப்பட்டுள்ள நிலையில் அகழாய்வில் பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் அறிவித்துள்ளார். கீழடியில் தொல்லியல் துறை இயக்குநர் ( கீழடி பிரிவு) ரமேஷ், இணை இயக்குநர் அஜய் உள்ளிட்டோர் தலைமையில் 15க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள், தொல்லியல் துறை மாணவ, மாணவிகள் அகழாய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - பரிசுகள், மொய்ப்பணம் வேணாங்க... மதுரையில் எளிமையாக நடைபெற்ற இயக்குநர் அமீர் மகள் திருமணம்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Bakery Training: தமிழ்நாடு அரசு சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கூடுதல் விவரங்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)