மேலும் அறிய

கஞ்சா சந்தையாகும் கம்பம்; போதையை விட மோசமாகும் கண்காணிப்பு!

ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் கஞ்சா, தேனி மாவட்டம் கம்பத்தில் தான் இறக்குமதி செய்யப்பட்டு, பிற பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படுகிறது.

தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம் விளங்குகிறது . இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது ,தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பத்திலிருந்து ஏராளமான வணிக ரீதியான போக்குவரத்துகள் தமிழக-கேரள இரு மாநிலங்களுக்குமிடையே இருந்து வருகிறது. 

கஞ்சா சந்தையாகும் கம்பம்; போதையை விட மோசமாகும் கண்காணிப்பு!

கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம்மெட்டு, குமுளி, கட்டப்பனை ,வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது, அதேபோலத்தான்  இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது.  கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது. ”போதையினா அது  கம்பம் கஞ்சா தான்” என்ற வசனம் பழைய மலையாள படங்களிலும் வந்துள்ளது. அது போலதான் கம்பத்தில் கிடைக்கும் கஞ்சாவின் போதைக்கு தனி மார்க்கெட் உள்ளது. கம்பர் வடக்குப்பட்டி பகுதியில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது, தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கஞ்சா கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ள நிலையில் ,

கஞ்சா சந்தையாகும் கம்பம்; போதையை விட மோசமாகும் கண்காணிப்பு!

அதற்கான விலை ஏற்றமும் அதிகப்படியாக கஞ்சாவிற்கு கூடுதல் மார்க்கெட் எகிறியுள்ளது. இதனை தடுப்பதற்கு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் கேரள  இடுக்கி மாவட்ட காவல்துறை என இரு மாநில எல்லைப் பகுதிகளில் கஞ்சா கடத்துவது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகளிலும் அவ்வப்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு செல்லும்போது போலிசாரால் பிடிபடுவது  போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமே அதிகமாக சிக்கி வருகின்றனர். காரணம் இவர்கள் குடிப்பதற்காக வாங்கிச் செல்லும் 100 கிராம், 200 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்வதும் போன்ற சம்பவங்களால் போலிசார் கஞ்சா  தடுப்பு நடவடிக்கைகளை கணக்கு காட்டி வருகின்றனர் .ஆனால் மொத்தமாக தேக்கி வைக்கப்படும் கஞ்சா எங்கிருந்து வருகிறது, என்றும் தேக்கிவைத்து விற்பவர்கள் யார் என்று கண்டறிய போலீசார் அவ்வப்போது தவறி வருவதாக புகார் எழுகின்றது.

கஞ்சா சந்தையாகும் கம்பம்; போதையை விட மோசமாகும் கண்காணிப்பு!இந்த பகுதிக்கு வரும் கஞ்சாவானது ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து குறிப்பாக கம்பம் பகுதியில் அதிகமாக இறக்குமதி ஆவதாகவும் புகார் எழுகிறது, தேனி மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வருஷநாடு பகுதியில் கஞ்சா தோட்டங்கள் அளிக்கப்பட்டதும்,  அதேபோல சில மாதங்களுக்கு முன்பு கம்பம் ஆலமரம் கோவில் தெருவில் மலையடிவாரத்தில் கஞ்சா தோட்டம் விளைவித்து இருந்ததை போலீசார் அழித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. தேனி மாவட்டத்தில் இது வரை பொறுப்பேற்றிருந்த கண்காணிப்பாளர்கள் கஞ்சா விற்பனையை தடுக்க தவறியுள்ளதாகவும் , புதிதாக தேனி மாவட்டத்திற்கு பொறுப்பேற்க உள்ள புதிய காவல் கண்காணிப்பாளர் கஞ்சா போன்ற போதை பொருட்களை தடுப்பாரா என்று  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாKanimozhi Slams Modi | ”மோடிக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு” கடுமையாக சாடிய கனிமொழி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Madurai: ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
ஒரே வாரத்தில் சிதிலமடைந்த சாலை ; அவல நிலையால் மக்கள் அதிருப்தி
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
வீடு கட்டுவதில் பிரச்சினை: மகனை மரத்தில் கட்டி வைத்து அடித்த தந்தை - உயிரிழந்த மகன்
Nainar Nagendran: எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
எனக்கு நிறைய பேரை தெரியும் அதுக்காக அது என்னுடைய பணம் ஆகிடுமா? - நயினார் நாகேந்திரன்
Tamannaah Bhatia: ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
ஐபிஎல் சட்டவிரோத ஒளிபரப்பு வழக்கு.. சிக்கலில் நடிகை தமன்னா.. சம்மன் அனுப்பிய போலீசார்!
Embed widget