மேலும் அறிய

காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு - 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் பணம், நகை கொள்ளை !

காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளின் மொழியில் பேசும்போது பல காத்திரமான அரசியலை அவர்களைக் கொண்டு மிக இயல்பான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது. காக்கா முட்டைத் திரைப்படம் சிறந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் உசிலம்பட்டியில் காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டதாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Womens Job Fair: மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம் - பதிவு செய்ய நாளையே கடைசி தேதி

காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு - 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் பணம், நகை கொள்ளை !

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அடுத்த விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக திரைப்பட வேலை தொடர்பாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வரும் சூழலில் அவரது வீட்டில் உள்ள செல்லப்பிராணிகளுக்கு மணிகண்டனின் ஓட்டுநர்களான ஜெயக்குமார், நரேஷ்குமார் என்ற இருவரும் தினசரி வந்து  உணவு வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் வீட்டில் திருட்டு - 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள் மற்றும் பணம், நகை கொள்ளை !

இந்நிலையில் நேற்று  முன்தினம் நாய்க்கு உணவை வைத்துவிட்டு சென்ற பின் நேற்று வழக்கம்போல மாலை 4 மணியளவில் நாய்க்கு உணவு வைக்க வந்த நரேஷ்குமார். வீட்டின் கதவுகள் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் பீரோவில் இருந்த கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய இரு தேசிய விருதுக்கான வெள்ளிப் பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது முதற்கட்டமாக தெரிய வந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள இயக்குநர் மணிகண்டன் நேரில் வந்து ஆய்வு செய்த பின்னரே மேலும் பணம், நகை ஏதும் கொள்ளைபோனதா என தெரிய வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, டி.எஸ்.பி., நல்லு தலைமையிலான போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Pudupattinam Beach: சூப்பர் சுற்றுலாத்தலம் புதுப்பட்டினம் பீச்... அடிப்படை வசதிகள் செய்து தாங்க: மக்கள் கோரிக்கை

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Madurai: மீண்டும் ரூ.3 கோடி மதிப்பிலான நிலம் தானம்.. மதுரை ஆயி பூரணம்மாள் அடுத்தடுத்து அசத்தல்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget