மேலும் அறிய
Jallikattu 2025 ; “இன்று மதுரையில் ஜல்லிக்கட்டு” எங்கு ? எதற்காக தெரியுமா..?
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி அணிவித்து மரியாதை செய்யப்பட்டு, கேரியர் டிபன் பாக்ஸ் பரிசு வழங்கி வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி
Source : whats app
போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு தங்கக் காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும், வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது.
மதுரை ஜல்லிக்கட்டு போட்டி 2025
தமிழர்களின் வீர விளையாட்டுப் போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெறும். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என முக்கியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் அடுத்தடுத்த நாட்கள் நடைபெறும். இந்தாண்டு 2025-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியானது மூன்று இடங்களிலும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெற்று வருகிறது.
அலங்காநல்லூர் - கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டி
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை வடக்கு மாவட்டம் மற்றும் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் 2 நாட்கள் மாபெரும் ஜல்லிக்கட்டு மாண்புமிகு வணிகவரி பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
900 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர்
மாடு பிடி வீரர்கள் உறுதிமொழி, ஏற்க கோயில் காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டது. மதுரை அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில், மதுரை வடக்கு மாவட்ட திமுக , கிழக்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் 900 காளைகளும் 450 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் காளைகளுக்கு தங்கக் காசு, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகளும், வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கு தங்கக் காசு, சைக்கிள், மிக்ஸி உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் வழங்கப்படுகிறது.
அனைத்து காளைகளுக்கும் பரிசுப் பொருள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி அணிவித்து மரியாதை செய்து, டிபன் பாக்ஸ் பரிசு வழங்கி வாடிவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை 170 காளை களுக்கு மேல் களம் கண்டுவிட்டன. அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க முடியாத பல காளைகள் இங்கு பங்கேற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதே போல் பார்வையாளர்களும் எளிமையாக காணும் வகையில் கீழக்கரை ஜல்லிக்கட்டு அமைந்துள்ளதாக தெரிவித்தனர். உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களும் கூட்ட நெரிசல் இல்லாமல் ஜல்லிக்கட்டு காண ஏதுவாக இருக்கிறது எனவும் தெரிவித்தனர். தொடர்ந்து கீழக்கரை கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் ஜல்லிக்கட்டு காணும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ஆந்திராவில் இருந்து மதுரைக்கு மூட்டை மூட்டையாக கஞ்சா கடத்தல் - கிடைத்த ரகசிய தகவல்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தட்டுக் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்கக்கூடாதா? இந்து சமய அறநிலையத்துறை பரபரப்பு விளக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















